ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மருந்துகளுடன் கூடுதலாக 50 ஆயிரம் டன் கோதுமையை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ள நிலையில், அந்நாட்டில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்த காரணத்தினால் கோதுமை ஏற்றுமதியை தாலிபான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அத்துமீறி உள்ளே புகுந்த தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அவர்களின் ஆட்சியின் காரணமாக 97% மக்கள் பசி மற்றும் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அந்நாட்டிற்கு மருந்துகளுடன் கூடுதலாக 50 ஆயிரம் டன் கோதுமையை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளது.
இந்தநிலையில், உக்ரைன்-ரஷ்ய போர் காரணமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
குறிப்பாக நாட்டில் கோதுமை விலை கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது. உணவுப் பற்றாக்குறை அதிகரித்த காரணத்தினால் கோதுமை ஏற்றுமதியை தாலிபான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.