இந்தியாவை விட்டு வெளியேறும் மெட்ரோ.. 19 வருட சாம்ராஜ்ஜியம் உடைகிறது..!

ஆட்டோமொபைல் துறையில் துவங்கி, சிமெண்ட், தற்போது ரீடைல் வரையில் அடுத்தடுத்து இந்தியாவை விட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவது தொடர் கதையாகியுள்ளது. ஒருபக்கம் உலக நாடுகளில் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ள பணவீக்கம், வர்த்தகத் தொய்வு பெரும் தடையாக இகுக்கும் நிலையில், இந்தியாவில் தற்போது அனைத்து துறையிலும் போட்டி அதிகரித்துள்ளது.

இதைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி வருகிறது. அப்படி வெளியேறும் நிறுவனங்களை இந்திய நிறுவனங்கள் வாங்குவதற்காகப் போட்டிப்போட்டு வருகிறது.

மதுரை அலுவலகத்தினை விரிவாக்கம் செய்யும் ஹனிவெல் டெக்.. இனி வேற லெவல்..!

மெட்ரோ AG

மெட்ரோ AG

ஜெர்மன் நாட்டின் கேஷ் அண்ட் கேரி ரீடைல் வர்த்தக நிறுவனமான மெட்ரோ AG இந்தியாவில் அதிகப்படியான தள்ளுபடி விலையில் ஹோல்சேல் வர்த்தகத்தைச் செய்து வருகிறது. குறிப்பாகப் பெரு நகரங்களில் இருக்கும் சிறு கடைகளுக்கு அதிகப்படியான தள்ளுபடி அளித்து முக்கிய வாடிக்கையாளராகக் கொண்டு உள்ளது.

2003 முதல்

2003 முதல்

இந்தியாவில் 2003ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் மெட்ரோ AG நிறுவனம் நாடு முழுவதிலும் சுமார் 31 கடைகளை வைத்துள்ளது. இந்திய ரீடைல் துறையில் தற்போது போட்டி அதிகரித்துள்ள காரணத்திற்காகவும், தொடர்ந்து அதிகப்படியான முதலீட்டை செய்ய முடியாத நிலையில் இந்த ஜெர்மன் நிறுவனம் தள்ளப்பட்டு உள்ளதாலும் இந்திய வர்த்தகத்தை விற்பனை செய்துவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.

ஜேபி மோர்கன் மற்றும் கோல்டுமேன் சாச்சஸ்
 

ஜேபி மோர்கன் மற்றும் கோல்டுமேன் சாச்சஸ்

மெட்ரோ AG நிறுவனம் இந்திய வர்த்தகத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ள நிலையில், பெயின் அண்ட் கோ நிறுவனத்திடம் மெட்ரோ இந்திய வர்த்தகத்தின் தற்போதைய மதிப்பீட்டை ஆய்வு செய்து அறிக்கையைப் பெற்றுள்ளது. இதன் பின்பு பையர்களை (buyers) தேடிப்படிக்கும் பணியை ஜேபி மோர்கன் மற்றும் கோல்டுமேன் சாச்சஸ் ஆகிய நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளது.

போட்டி

போட்டி

தற்போது மெட்ரோ AG இந்திய வர்த்தகத்தை 1.5 முதல் 1.75 பில்லியன் டாலர் வரையில் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ள நிலையில் இந்நிறுவனத்தை வாங்க அமேசான், தாய்லாந்து நாட்டின் Charoen Pokphand (CP) Group, ரிலையன்ஸ் ரீடைஸ், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் (Dmart), டாடா குரூப், லூலூ குரூப், சமாரா கேப்பிடல் ஆகிய நிறுவனங்கள் வாங்குவதற்காக ஆர்வம் காட்டியுள்ளது.

நஷ்டம்

நஷ்டம்

2021ஆம் ஆண்டில் மெட்ரோ AG நிறுவனத்தின் இந்திய ஈகாமர்ஸ் வர்த்தகம் 5.7 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது, புதிதாக 3 கடைகளைத் திறந்துள்ளோம். அதேபோல் B2B பிரிவில் லாபத்தில் இயங்கும் ஓரே நிறுவனம் மெட்ரோ ஆனால் போட்டி அதிகமாகியுள்ள காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் பல 100 மில்லியன் டாலர்களைப் புதிய வர்த்தகத்தைப் பெறுவதற்காக மட்டும் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது எனத் தெரிவித்துள்ளது மெட்ரோ.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

After 19 years, Metro plans to leave India; Reliance Dmart, Amazon race to acquire

After 19 years, Metro plans to leave india; Reliance Dmart, Amazon race to acquire இந்தியாவை விட்டு வெளியேறும் மெட்ரோ.. 19 வருட சாம்ராஜ்ஜியம் உடைகிறது..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.