ஜேபி மோர்கன் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் உச்சக் காலம் முடிந்துவிட்டது என டிசிஎஸ், இன்போசிஸ், எச்.சி.எல் உள்ளிட்ட பிரபலமான ஐடி நிறுவனங்களின் மதிப்பை குறைத்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள் 2021-2022 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு வரை நல்ல வளர்ச்சியைப் பெற்று வந்தன. அதுவே ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4வது காலாண்டில் சரிந்துள்ளது.
கடுமையான போட்டி, விநியோக சிக்கல்கள் போன்ற காரணங்களால் ஐடி துறையின் வளர்ச்சியை மிகப் பெரிய பாதிக்கும். என ஜேபி மார்கன் தெரிவித்துள்ளது. பணவீக்கத்தால் ஐடி நிறுவனங்களின் வட்டி மற்றும் வரிகளுக்கு முந்தைய வருவாய் சரிந்து வருகிறது.
பணவீக்கத்தினால் ஐடி பங்குகள் தடம் புரளுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
ஒவர் வெயிட் நிறுவனங்கள்
இன்போசிஸ்னிறுவனத்தை ஒவர் வெயிட் என தெரிவித்துள்ளது. மேலும் டெக் மஹிந்த்ரா, எம்பசிஸ், பெர்சிஸ்டண்ட் சிஸ்டம் உள்ளிட்ட நிறுவனங்களின் வளர்ச்சி ஓவர் வெயிட்டாக உள்ளது என தெரிவித்துள்ளது
ஐடி நிறுவனங்களின் மார்ஜின் குறைவாக இருக்க, நிறுவனங்கள் இடையில் உள்ள திறனுக்கான போட்டி, ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள வெண்டும் என்ற கட்டாயம் போன்றவை தான் காரணம் என கூறப்படுகிறது.
டிசிஎஸ்
இந்தியாவின் நம்பர் ஐடி நிறுவனம் என அழைக்கப்படும் டிசிஎஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை விலை 3,262 ரூபாயாக உள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது அது 7.7 சதவீதமாகச் சரிந்துள்ளது. வரும் காலாண்டில் அதன் வளர்ச்சி மேலும் சரியும் என ஜேபி மார்கன் கூறுகிறது.
எல்&டி
எல்&டி இன்போடெக் பங்கின் தற்போதைய விலை சந்தை விலை 3,504 ரூபாயாக உள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 32.6 சதவீதம் சரிந்துள்ளது.
ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ்
ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸின் தற்போதைய பங்கு விலை 1009. 4 ரூபாயாக உள்ளது. இப்போது அது 18.6 சதவீதம் சரிந்துள்ளது.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை 1427.2 ரூபாயாக உள்ளது. இப்போது அது 20.1 சதவீதம் சரிந்துள்ளது.
விப்ரோ
விப்ரோ நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை 1427.2 ரூபாயாக உள்ளது. இப்போது அது 32.7 சதவீதம் சரிந்துள்ளது.
நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் குறியீடு
நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 15 சதவீதம் சரிந்துள்ளது. எனவே தற்போதைய வருவாய் சீசனில் மேலும் வருவாய் மோசமாக இருக்கும் என கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் டிஜிட்டல் சேவை தேவையாகல் ஒரேயடியாக இந்த நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்தன. ஆனால் இப்போது அந்த வருவாய் வளர்ச்சி குறையும் என கூறப்படுகிறது.
JP Morgan downgrades Indian IT sector And TCS, Wipro, HCL Tech, L&T Tech Firms
JP Morgan downgrades Indian IT sector And TCS, Wipro, HCL Tech, L&T Tech Firms | இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் உச்சக் காலம் முடிந்துவிட்டது.. ஜேபி மார்கன் அறிக்கை!