டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழ் நிறுவனமான இ-முத்ரா, ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஐபிஓ மூலம் 412 கோடி ரூபாய் முதலீட்டை இ-முத்ரா நிறுவனம் திரட்ட உள்ளது. 161 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளாகவும், 251.79 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஆஃபர் ஃபார் சேலாகவும் விற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 20-ம் தேதி தொடங்கப்பட்டுள்ள இ-முத்ரா ஐபிஓ பங்கு வெளியீடு, மே 24-ம் தேதி வரை நடைபெறும்.
எல்ஐசி ஐபிஓ: 8.62% தள்ளுபடி விலையில் பட்டியல்.. முதலீட்டாளர்கள் சோகம்..!
பங்கின் விலை
இ-முத்ரா பங்குகளின் விலை ஒன்று 243 ரூபாய் முதல் 256 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தது 1 லாட் 58 பங்குகள், 14,848 ரூபாய் என வாங்க வேண்டும். சில்லறை முதலீட்டாளர்கள் அதிகபட்சம் 13 லாட், 754 பங்குகளை 1,93024 ரூபாய்க்கு வாங்கலாம்.
இந்த முதலீட்டை என்ன செய்யும்?
ஐபிஓ மூலம் திரட்டப்படும் இந்த நிதியைக் கடனை அடைக்கவும், மூலதனத்தாகவும், தரவு மையத்துக்குத் தேவையான தொழில்நுட்பங்களை வாங்குவது போன்றவற்றுக்கு இ-முத்ரா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
லாபம்
இ-முத்ரா நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக லாபத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019-2020 நிதியாண்டில் 17 கோடி ரூபாயும், 2020-2021 நிதியாண்டில் 25 கோடி ரூபாயும் லாபம் அடைந்துள்ளதாக இ-முத்ரா தெரிவித்துள்ளது.
50 கோடி
இ-முத்ரா நிறுவனம் வருமான வரி தாக்கல், டெண்டர்கள், வெளிநாட்டு வர்த்தகம், வங்கி, ரயில்வே மற்றும் பல தேவைகளுக்காக, இதுவரையில் 50 கோடி டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழ்களை விநியோகித்து உள்ளது.
சந்தை பகிர்வு
சிஜிட்டல் கையெழுத்து சான்றிதழ் சந்தையில் 37.9 சதவீத சந்தை பகிர்வுடன் இ-முத்ரா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
முக்கிய வாடிக்கையாளர்கள்
இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், லார்சன் & டூப்ரோ இன்ஃபோடெக் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பார்தி ஆக்சா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முக்கிய வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
வல்லுநர்கள் பரிந்துரை
இ-முத்ரா நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது என்பது முதலீடு செய்வதற்குச் சாதகமாக உள்ளது. ஆனால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையால் கவனமாக இருக்க வேண்டும் என கூறுகிறார்கள்.
கிரே மார்க்கெட்
எல்.ஐ.சி போன்று இ-முத்ரா நிறுவன பங்குகளும் தங்களது 256 ரூபாய் பங்கு என்ற விலையிலிருந்து குறைந்து தள்ளுபடி விலையில் தான் பட்டியலிடப்படும் என கிரே மார்க்கெட் நம்புகிறது.
சந்தை
ரஷ்யா – உக்ரைன் போர், பணவீக்கம், வட்டி விகித உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்றவை பங்குச்சந்தையை பெரும் அளவில் பாதித்து வருகின்றன.
Things To Know About eMudhra IPO
Things To Know About eMudhra IPO | இ-முத்ரா ஐபிஓ: பங்குகளை வாங்கலாமா? கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்!