ஒரு வாரம் மொத்தமாக தலைமறைவான விளாடிமிர் புடின்: வெளிவராத பின்னணி


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உடல் நிலை கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மோசமான நிலையில் இருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் சுதந்திர ஊடகம் ஒன்று முன்னெடுத்த விசாரணையில் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

2017ல் இருந்தே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றி வருகிறார் என தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, திடீரென்று ஒரு வாரம் புடின் தலைமறைவாக சென்றுவிடுவார் எனவும், இது அடிக்கடி நிகழும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் உளவாளி ஒருவர் விளாடிமிர் புடினின் உடல் நிலை தொடர்பில் தெரிவிக்கையில், அவர் தீவிர கண்கானிப்பில் இருந்து வருகிரார் எனவும், எப்போதும் மருத்துவர்கள் அவர் பக்கத்தில் இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2016 மற்றும் 2017 காலகட்டத்தில், விளாடிமிர் புடின் எங்கே சென்றாலும் 5ல் இருந்து 13 மருத்துவர்கள் குழு அவருடன் செல்லும் எனவும் கூறப்படுகிறது.

ஒரு வாரம் மொத்தமாக தலைமறைவான விளாடிமிர் புடின்: வெளிவராத பின்னணி

Picture: Reuters

2016 நவம்பர் மாதம் திடீரென்று ஒருவார காலம் புடின் தலைமறைவாகியுள்ளார். ஆனால் அப்போது அவர் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்பதாக வெளியான காணொளி, ஏற்கனவே தயாரிக்கப்பட்டது எனவும் கண்டறியப்பட்டது.

2017 ஆகஸ்டு மாதம் மீண்டும் அவர் தலைமறைவானார், தொடர்ந்து 2018 பிப்ரவரி மாதமும் சுமார் ஒருவார காலம் தலைமறைவானார்.
ஆனால் அதிகாரிகள் தரப்பில் புடினுக்கு குளிர் காய்ச்சல் என மட்டுமே தகவல் வெளியிட்டுள்ளனர்.

2019ல் விளாடிமிர் புடினுடன் எப்போதும் 9 சிறப்பு மருத்துவர்கள் அரசு விழாக்களில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே கொரோனா பரவல் ஏற்பட, கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. புடினை சந்திக்கும் விருந்தினர்கள் கண்டிப்பாக 2 வாரம் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.