காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளகுறிச்சி மாவட்டம், பழைய சிறுவங்கூர் பகுதியை சேர்ந்தவர் சுதா. இவர் தனது பள்ளி காலத்தில் இருந்தே காதலித்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் சுதா அவருடன் பேசவில்லை என கூறப்படுகிறது.
இதனை அடுத்து, ஆகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், சுதா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. 20 நாட்களுக்கு முன் ஆகாஷின் வீட்டிற்கு சென்ற சுதா அங்கு சென்றுள்ளார். பெற்றோர் இறப்புடன் அங்கேயே தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில், சுதா ஆகாஷின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.