காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டதால் புது மாப்பிள்ளை உள்ளிட்ட அவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் அவரது காதலுக்கு பிரியதர்ஷினி வீட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதனை அடுத்து அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் பிரியதர்ஷ்னிக்கு நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில் பிரியதர்ஷனியும் பாலமுருகனும் திருமண பத்திரிக்கை மற்றும் டிஜிட்டல் பேனர்களுக்காக உள்ள ஸ்டூடியோவில் புகைப்படம் எடுக்க வந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் பிரியதர்ஷினி மற்றும் பாலமுருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே பாண்டிதான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில், படுகாயமடைந்தவர்களை மீட்டு அக்கம்பக்கதினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாண்டி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.