கேண்ஸ் படவிழாவுக்கு சென்ற பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே, விலை உயர்ந்த ஆடைகளுடன் தனது சூகேஸை தவறவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ரன் படத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்கு வரும் விவேக், பேருந்து நிலையத்தில் தனது சூட்கேஸை பறிகொடுத்துவிட்டு தவிப்பார் அது போன்ற ஒரு இக்கட்டான நிலைக்கு பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே தள்ளப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து பல்வேறு முன்னணி நாயகர்கள் மற்றும் நாயகிகள் பங்கெற்றனர்.
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையும். பீஸ்ட் படத்தின் நாயகியுமான பூஜா ஹெக்டே முதன்முறையாக இந்த விழாவில் கலந்து கொண்டார்.
பார்வையாளர்களை கவரும் வகையிலான ஆடை மற்றும் நகைகள் அணிந்து பங்கேற்ற பூஜாவுக்கு அடுத்த சில நொடிகளில் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
அவரது அழகு சாதன பொருட்கள், மாற்று உடை மற்றும் விலை உயர்ந்த ஆடைகள் வைக்கப்படிருந்த சூட்கேஸ் ஒன்று மாயமானது . இதனை கண்டுபிடிப்பதற்காக காலை முதல் இரவு வரை தேடிய பூஜாஹெக்டேவின் சிகை அலங்கார நிபுணர் மயங்கி விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
பூஜாஹெடேவும் காலை மதியம் சாப்பிடாமல் இனி பெட்டிக் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்து நொந்து போனதால் தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டு இரவு தான் சாப்பிட்டதாக தெரிவித்தார்.
கேண்ஸ் திரைப்பட விழாவில் கேமரா முன்பு கெத்தாக போஸ் கொடுத்து விட்டு , சூட்கேஸை பறிகொடுத்ததால் மாற்று உடையின்றி தவித்த நிகழ்வால் பூஜா ஹெக்டேவும், அவருடன் சென்றவர்களும் அன்றைய நாள் முழுக்க பதற்றத்துடனே இருந்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக எடுத்துச்சென்ற தங்க வைர நகைகள் அனைத்தையும் அணிந்து கொண்டதால் அவை தப்பியது என்று பூஜா ஹெக்டே நிம்மதிப் பெருமூச்சி விட்டுள்ளார்.