ஜெட் ஏர்வேஸ் விமான சேவைக்கு 3 வருடங்களுக்குப் பிறகு பறக்க, விமான போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியது.
விமான நிறுவனங்கள் பயணிகளுடன் வானில் பறக்க ஏர் ஆப்ரேட்டர் சான்றிதழைப் பெற வேண்டும். ஜேட் ஏர்வேஸ் அதற்கான அனுமதியை பெரும் பணிகள் மே 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றது.
அதில் ஜெட் ஏர்வேஸின் அனைத்து விமானங்களும் அதன் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்தன. எனவே ஜெட் ஏர்வேஸ் விமான சேவைக்கு ஆப்ரேட்டர் சான்றிதழை விமான போக்குவரத்துத் துறை வெள்ளிக்கிழமை வழங்கியது.
சர்வதேச விமான சேவையில் சாதனை படைத்த இண்டிகோ.. ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிலை என்ன?
முன்னரே சேவை தொடக்கம்?
எனவே நவம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ஜூலை – செப்டம்பர் காலாண்டிலேயே தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
கடன் பிரச்சனை
2019-ம் ஆண்டு 25,000 கோடி ரூபாய் கடன் பிரச்சனையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ், தற்காலிகமாக விமான சேவையை நிறுத்துவதாக அறிவித்தது. தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த கடன் தொகையை மீட்க ஏலத்திற்கு வந்தது.
ஏலம்
2020-ம் ஆண்டு ஜலான் கல்ராக் கூட்டமைப்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏலத்தில் எடுத்தது. தொடர்ந்து உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமான சேவைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. ஆனால் கொரோனா தொற்று காலம் என்பதால் அதில் தாமதம் ஏற்பட்டு இப்போது எல்லா அனுமதிகளையும் ஜெட் ஏர்வேஸ் பெற்றுள்ளது.
வேலைவாய்ப்பு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மிண்டும் தொடங்கப்படுவதால் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஆயிரம் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவையில் அதற்கு என குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் உண்டு. ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பர் 1 விமான சேவை நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் இருந்தது. இப்போது அந்த இடத்தை இண்டிகோ நிறுவனம் பிடித்துள்ளது. தொடர்ந்து ஏர் இந்தியா உள்ளது. விரைவில் அந்த இடத்தை மீண்டும் பிடிக்க ஜெட் ஏர்வேஸ் முனைப்பைக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போது கெட் ஏ ர்வேஸ் மீண்டும் வரும் என அதன் பல வாடிக்கையாளர்களும் காத்திருக்கிறார்கள்.
பங்கு விலை
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் பறக்க தேவையான அனைத்து அனுமதிகளையும் வாங்கியுள்ளதால் வெள்ளிக்கிழமை அதன் பங்குகள் மதிப்பு 4.96 சதவீதம் அதிகரித்து 113.30 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
Jet Airways Gets DGCA Nod To Resume Flight Operations After 3 Years
Jet Airways Gets DGCA Nod To Resume Flight Operations After 3 Years | சீறி பாய்ந்து வரும் ஜெட் ஏர்வேஸ்.. எதிர்பார்த்ததை விட முன்னரே சேவை தொடக்கம்?