![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653173449_NTLRG_20220521131521876979.jpg)
சென்னையில் முதன் முறையாக தைவானிஸ் திரைப்பட விழா
சென்னையில் செயல்பட்டு வரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் அமைப்பு பல நாட்டு தூதரகங்களுடன் இணைந்து திரைப்பட விழாக்களை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் சென்னையில உள்ள தைபெ பொருளாதார மற்றும் கலாச்சார மையத்துடன் இணைந்து வரும் மே 23, 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் தைவானீஸ் திரைப்பட விழாவை நடத்துகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் மையத்தில் 23ம் தேதி மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். சென்னையில் உள்ள தைபெ பொருளாதார மற்றும் கலாச்சார மையத்தின் பொது இயக்குநர் பென் வேங்க், இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷனின் துணை தலைவர் ராமகிருஷ்ணன் , செயலாளர் தங்கராஜ், திரைப்பட இயக்குநர் ரத்தீந்திரன் பிரசாத் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்கள். சர்வதேச புகழ்பெற்ற தைனீஸ் படங்கள் திரையிடப்படுகிறது.