ஒரு படத்தை நாம் பார்க்கும்போது நமக்கு ஒரு மாதிரியாகவும் மற்றவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் தெரியும். சில சமயங்களில் நாம் பார்த்த படங்கள் கூட மறுமுறை பார்க்கும்போது வேறு கோணத்தில் தெரியவும் வாய்ப்புள்ளது. ஆப்டிக்கல் இல்யூஷன் வகையை சார்ந்த இந்த மாதிரியான படங்கள சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு படத்தை சாதாரணமாக பார்க்கும்போது ஒரு மாதிரியாகம், அதையே உற்றுநோக்கி பார்க்கும்போது பல மர்மங்கள் அடங்கியுள்ளதையும் நம்மால் பார்க்க முடியும். இப்படிப்பட்ட படங்களை நாம் பார்க்கும்போது முதலில் நாம் எதை பார்க்கிறோம் என்பதை வைத்து நமது ஆளுமையை சொல்லிடலாம் என்றும் தகவல்கள் கூறுகிறது.
அந்த வகையில் தற்போது ஒரு படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நீங்கள் பல விலங்குகளைப் பார்க்க முடியும்: ஆனால் சாதரணமாக பார்த்தால் அதில் ஒரு விலங்கு மட்டுமே உங்களுக்கு தெரியும். உற்று நோக்கினால் பல உருவங்களை நீங்கள் காணலாம். இவை உங்களின் கண்களுக்கு ஒரு பரிசோதனையாக கூட அமையும்.
இந்த ஒற்றை படத்தில் மறைந்திருக்கும் வனவிலங்குகளைக் கண்டறியும் போது நீங்களே வியப்பில் ஆழந்துவிடுவீர்கள். அதே சமயம் இந்த படத்தில் உள்ள விலங்குகளை கண்டுபிடிப்பது சுவாரஸ்யமாகவும் இருக்கும். இந்த ஒரு படத்தில் எப்படி இவ்வளவு விலங்குகள் ஒளிந்திருக்கும் என்று யோசிக்க வைக்கும் படம்.
நீங்கள் இந்த படத்தில் உள்ள அத்தனை விலங்குகளையும் பார்க்க முடியுமா?
நீங்கள் முதலில் என்ன பார்க்கிறீர்கள்? பெரிய யானையின் கருப்புப் படம் மற்றும் கழுதையின் வெள்ளைப் படம். உடலில் பல்வேறு உயிரினங்கள் மறைந்துள்ளன. இதை நீங்கள் தேடிப்பார்த்தால் உங்கள் தலையை பீய்த்துக்கொள்ளும் நிலை ஏற்படும். பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தில் எத்தனை விலங்குள் உள்ளது என்பதை கண்டுபிடிக்குமாறு சவால் விட்டுகின்றனர். ஒருசில நெட்டிசன்கள் படத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு கமெண்ட் செய்துள்ளனர்.
படத்தில் ஐந்து விலங்குகள் இருப்பதாகவும், பத்து விலங்குகள் இருப்பதாகவும் பலரும் எண்ணிக்கையை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் இவை அனைத்துமே உண்மையல்ல. படத்தை உற்று நோக்கினால் அதில் 16 விலங்குகள் இருப்பதை பார்க்கலாம்.
சாதாரணமாக பார்க்கும்போது யானை, கழுதை, நாய், பூனை, எலி, பாம்பு, மீன் ஆகியவை மட்டுமே தெரியும். அது எப்படி என்ற விளக்கத்தைப் பார்த்தால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். சிலருக்கு பதில் தெரிந்திருக்காமல் இருக்கலாம் அல்லது தவறவிட்டிருக்கலாம்,
ஆனால் பயனர் விளக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஒரு படத்தில் இவ்வளவு வனவிலங்குகள் இருப்பது விசித்திரமாகவும் மனதை உலுக்குவதாகவும் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருவது சுவாரசியமானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“