ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஸ்காட் மோரிசன் தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் இன்று (மே 21) நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர்
அந்தோனி ஆல்பனீஸ்
இடையே கடுமையான போட்டி நிலவியது.
ஆஸ்திரேலியாவில் ஆட்சியை கைப்பற்ற மொத்தமுள்ள 151 உறுப்பினர் இடங்களில் 76 உறுப்பினர் இடங்கள் அவசியம் என்ற நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி கூட்டணி 52 உறுப்பினர் இடங்களையும், அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 உறுப்பினர் இடங்களையும் கைப்பற்றி உள்ளது.
கோதுமை ஏற்றுமதிக்கு தடை – அரசு அதிரடி உத்தரவு!
வெற்றி பெற 76 இடங்களே தேவை என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கையின் மத்தியிலேயே 72 உறுப்பினர் இடங்களை தொழில் கட்சி கைப்பற்றியதன் முலம் அந்தோனி அல்பானீஸ் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளது உறுதியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்க உள்ள தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீசுக்கு, பிரதமர் ஸ்காட் மோரிசன் வாழ்த்துத் தெரிவித்தார். இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்தோனி ஆல்பனீசுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.