"நெஞ்சுக்கு நீதி" திரைப்படத்திற்கு பேனர் வைத்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக புகார்

“நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்திற்கு வாழ்த்து பேனர் வைத்த பெரம்பலூர் மாவட்ட தலைமைக் காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி அதிமுக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகி உள்ளது “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம். இந்த படம் வெற்றி வாழ்த்தி பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் கதிரவன் என்பவர் பேனர் ஒன்றை வைத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தலைமைக் காவலர் கதிரவன் மீது பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமைக்காவலர் கதிரவன் மீது துறைரீதியிலான நடவடிக்கை மற்றும் கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
image
அதிமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான பாபு முருகவேல் டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “அரசு ஊழியர்கள் அரசுக்காகத்தான் பணிபுரிய வேண்டும். அரசாங்கத்திற்காக பணியாற்றக்கூடாது. அரசு நிரந்தரமானது, அரசாங்கம் மாறிக்கொண்டே இருக்கும். “நெஞ்சுக்கு நீதி” திரைப்பட வெளியீட்டிற்காக பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் கதிரவன் என்பவர் விளம்பர பதாகை வைத்திருப்பதை சமூக வலைத்தளங்களில் காணநேர்ந்தது. அது அப்பட்டமான காவல்துறை ஊழியர்கள் வழிமுறை நிர்வாகச் சட்டத்தின் பிரிவு 29ன் கீழ் கண்டிக்கக்கூடிய குற்றம்.
image
சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் காவல்துறை எடுக்காத பட்சத்தில் அதிமுக சார்பில் புகார் அளித்துள்ளேன். காவல்துறை தலைமை இயக்குநர் முதல் கடைநிலை காவலர் வரை ஒழுக்கமாகவும், ஒழுக்கத்தை போதிக்கின்றவர்களாகவும் இருக்கவேண்டும். கதிரவனின் செயல்பாடு யாரையோ ஒருவரை திருப்திப்படுத்துவதற்காகவும் அதில் உள்நோக்கம் உள்ளதும் அறிய வருகிறது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.