பெண்ணை ஏமாற்றிய மூன்று மந்திரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் கிராமத்தை சேர்ந்த சரவணன். இவரது மகன் சிவகுமார் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதனால், வீட்டில் உள்ளவர்கள் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்த மணி, சரவணனின் மனைவி முத்துலெட்சுமியிடம் குறி சொல்லியுள்ளார்.
இன் அரிபநீங்குவதுடன், வசதியாகவும் மகிழ்வுடனும் வாழலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அவர்கள் 75,000 ரூபாய் கடன் வாங்கி புதையல் எடுக்க ஏற்பாடு செய்துள்ளார். அங்கு பூஜை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மணி மற்றும் அவரது கூட்டாளிகள் அவரின் வீட்டில் 5 அடிக்கு பள்ளம் தோண்டினர். பின்னர், தாங்கள் கொண்டுவந்த சிறிய சிலைகள் மற்றும் செம்பு நாணயங்களை குழிக்குள் இருந்து எடுத்தது போன்று சொல்லியுள்ளனர்.
மேலும், ஒரு மாதம் சாணம் வைத்து மெழுகி பூஜை செய்தனர். ஒரு மாதம் கழித்து பார்த்த போது அவை தங்கம் இல்லை என தெரிகிறது. இதுகுறித்து உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் போலி மந்திரவாதிகளை கைது செய்தனர்.