”ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வெற்றியை பெற்றது பேரறிவாளன்தான். மற்ற யாரும் இதற்கு காரணம் இல்லை” என்று சீமான் தெரிவித்து உள்ளார்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணி நிரந்தரம் கோரி தொடங்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம். 6 ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது.700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து, பட்டினப்பாக்கத்தில் இருக்கும் சென்னைக் குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் அரசு உங்கள் உழைப்பை தனியார் நிறுவன வருமானத்திற்கு தாரைவார்க்கப் பார்க்கிறது என்று கூறினார்..தொடர்ச்சியாக போராடுவோம் என்றும் எங்கள் போராட்டத்திற்கு எப்பொழுதும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று கூறினார். மேலும் அவர்களுடன் அமர்ந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியார்களிடம் பேசிய சீமான், ”தூய்மை இந்தியாவை பற்றி பேசுகிறோம்.. ஆனால் தூய்மைப் பணியாளருக்குக்கான நிரந்தரப் பணி இல்லாமல் அவஸ்தைப்படுகிறார்கள். தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவர்கள் சாம்பள உயர்வு கேட்கவில்லை. பணி உயர்வுதான் கேட்கிறார்கள். அரசு இதை காலம் கடத்தி போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது, ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தார்.
மேலும் பேரறிவாளனை பற்றி பேசியபோது திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் பேரறிவாளன் விஷயத்தில் செய்தது என்ன என்று கூற முடியுமா? மேலும் இந்த போராட்டத்தில் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான். அவரே சட்டங்களை படித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த வழக்கை தானே முடித்து வென்று உள்ளார். வழக்கறிஞர்கள் பிரபு மற்றும் பாரி இருவரும் தான் அவருக்காக வழக்கை முன்னெடுத்து சென்றார்கள்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM