மும்பை,
15-வது ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்று வரும் முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
இப்போட்டியில் வெற்றிபெற்றால் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். அதேவேளை இப்போட்டியில் டெல்லி தோல்வியடைந்துவிட்டால் 16 புள்ளிகள் பெற்றுள்ள பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிடும்.
இதற்கிடையில், இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கி விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி மும்பை அணி ௧௦ ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், மும்பை-டெல்லி இடையே நடைபெற்று வரும் போட்டியை பெங்களூரு அணியினர் உற்றுநோக்கி வருகின்றனர். பெங்களூரு அணி வீரர்கள் மற்றும் அணி பயியிற்சியாளர், நிர்வாகிகள் என அனைவரும் தாங்கள் தங்கியுள்ள ஓட்டலில் குழுவாக இருந்து மும்பை-டெல்லி போட்டியை தற்போது கண்டுகளித்து வருகின்றன. இந்த போட்டியில் மும்பை வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தோடு போட்டியை பெங்களூரு அணியினர் கண்டுகளித்து வருகின்றனர்.
மும்பை-டெல்லி போட்டியை ஓட்டலில் இருந்தவாறு பெங்களூரு அணியினர் இப்போட்டியை டிவியில் பார்த்து வரும் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.