ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் செம அறிவிப்பு..! #DA

இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தியாக மத்திய அரசு ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் இருக்கும் ஊழியர்களின் நிலுவைத் தொகையுடன் சேர்த்து அவர்களது அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பின் படி ரயில்வே ஊழியர்களுக்குக் கொடுப்பனவு 14 சதவீதம் அதிகரித்து உள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் பல லட்சம் ஊழியர்களின் மாத சம்பளம் உயர உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்ந்து உயரும் நிலையில் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

இந்தியன் ரயில்வே எடுத்து இந்த ஒரு முடிவால் 2 வருடத்தில் ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்.. எப்படி?

ரயில்வே ஊழியர்கள்

ரயில்வே ஊழியர்கள்

ரயில்வே ஊழியர்களுக்கு DA விகிதம் 189 சதவீதத்திலிருந்து 196 சதவீதமாக உயர்த்தப்பட்டு ஜூலை 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும், இதேபோல் ஜனவரி 1 2022 முதல் அகவிலைப்படி அளவீடு 196 சதவீதத்தில் இருந்து 203 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு அமலாக்கம் செய்யப்படுகிறது என ரயில்வே அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்தது.

14 சதவீதம்

14 சதவீதம்

ரயில்வே நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு DA கொடுப்பனவை தலா 7 சதவிகித்தை இரண்டு பகுதிகளாக அறிவித்துள்ளது. ஆதாவது 6வது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஜூலை 1, 2021 முதல் தனியாக 7 சதவீத உயர்வும், ஜனவரி 1 2022 முதல் தனியாக 7 சதவீத உயர்வும் அளிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் 6வது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த முறை DA அளவு 14 சதவீதம் அதிகரித்துள்ளது. 14 சதவீத உயர்வு மூலம் ரயில்வே ஊழியர்களுக்கு 203 சதவீதம் DA கொடுப்பனவை அளிக்கிறது மத்திய அரசு. ஜனவரி 1, 2022 முதல் அகவிலைப்படி உயர்வும் நடைமுறைக்கு வரும்.

 

முக்கிய அறிவிப்பு
 

முக்கிய அறிவிப்பு

மேலும் நவம்பர் 18, 1960 மற்றும் டிசம்பர் 31, 1985 க்கு இடையில் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற CPF பயனாளிகளுக்குச் சமீபத்தில், மத்திய அரசு அகவிலை நிவாரண அளவீட்டை 368 சதவீதத்திலிருந்து 381 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது எனப் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 மத்திய அரசு விளக்கம்

மத்திய அரசு விளக்கம்

ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது DA நிலுவைத் தொகை தற்போது வழங்கப்படாது என்று சில நாட்களுக்கு முன்பு வெளியான அறிக்கையில் மத்திய அரசு தெளிவுபடுத்தியது.

நிலுவை

நிலுவை

ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகியவற்றுக்கான அகவிலைப்படி, அகவிலை நிவாரணத் தொகையைக் கோவிட் தொற்று பாதிப்பால் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

DA Hike: Modi Govt Hikes Dearness Allowance by 14% for These particular Railway Employees

DA Hike: Modi Govt Hikes Dearness Allowance by 14% for These particular Railway Employees ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் செம அறிவிப்பு..! #DA

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.