ராஜீவ் நினைவு நாள்: ஸ்டாலின்- காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லி வீர்பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோரும் மலரஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1944, ஆகஸ்ட் 20-இல் பிறந்த ராஜீவ் காந்தி, அமேதி தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர். 1984-இல் பிரதமராக இருந்த போது இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு பிறகு, அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்றார். கடந்த 1984 முதல் 1989 வரை ராஜீவ் காந்தி பிரதமராக பதவி வகித்தார்.

சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ஆம் ஆண்டு, மே 21-ஆம் தேதி’ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப் படை தாக்குதல் மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் தில்லி யமுனைக் கரையோரம் உள்ள வீர் பூமியில் தகனம் செய்யப்பட்டது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம், இந்தியாவில் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனிடையே, ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது தந்தை குறித்த விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது. அவர் ஒரு இரக்கமுள்ள, கனிவான மனிதர், எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை, அவர் மன்னிப்பு மற்றும் மற்றவர் உணர்வுகளைப் புரிந்துகொள்வதன் மதிப்பைக் கற்றுக் கொடுத்தார். நாங்கள் ஒன்றாக செலவழித்த நேரங்களை அன்புடன் நினைவுகொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.