லடாக்கில் 2ஆவது பாலத்தை கட்டும் சீனா – இந்தியாவின் ரியாக்‌ஷன் என்ன?

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் டிசோ ஏரியில் சீனா இரண்டாவது பாலம் கட்டுவது தொடர்பாக கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை அமைச்சகம், இரண்டு பாலங்களும் 1960 முதல் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளில் உள்ளன. சீசீனா நியாயமின்றி சொந்தம் கொண்டாடுவதையும், கட்டுமான பணிகள் மேற்கொள்வதையும் ஒருபோதும் இந்தியா ஏற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சீனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து 20 கிலோமீட்டா் தொலைவில் இந்த பாலம் கட்டப்படுகிறது

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “பாங்காங் ஏரி பகுதியில் கடந்தாண்டு கட்டிய பாலத்துக்கு அருகே மற்றொரு பாலத்தை சீனா கட்டி வருகிற தகவல் கிடைத்துள்ளது. இந்த 2 பாலங்களும் கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில் அமைந்துள்ளன. நமது பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்வது இல்லை. சீனா நியாயமின்றி சொந்தம் கொண்டாடுவதையும், கட்டுமான பணிகள் மேற்கொள்வதையும் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை.

இந்தியாவின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து முன்னேற்றங்களையும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நமது இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று பல நிகழ்வுகளில் இந்தியா தெளிவான கூறியுள்ளது. நமது இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மற்ற நாடுகள் மதிக்க வேண்டும் என்பதை எதிர்ப்பார்க்கிறோம்” என்றார்.

தேச பாதுகாப்பு நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, 2014ஆம் ஆண்டில் இருந்து எல்லை அருகே சாலைகள், பாலங்கள் ஆகிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இவை பாதுகாப்பு தேவைக்கு மட்டுமின்றி, அந்த பகுதிகளின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதலில் கட்டிய பாலத்திற்கு அடுத்ததாக கட்டப்படும் 2 ஆவது பாலம், சீனாவின் மிகப்பெரிய கட்டமைப்பு என்றும், 2ஆவது பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், இரண்டாவது பாலம், முதல் பாலத்தின் பணியை எளிதாக்குவதற்காக கட்டப்பட்ட ஒரு தற்காலிக கட்டமைப்பு என்று முன்பு கருதப்பட்டது. ஆனால், இப்போது அதற்கு நேர்மாறாக மாறியுள்ளது. இது தான் நிரந்தர பாலம் என்றும், முதல் பாலம் தான் 2 ஆவது கட்டுவதற்கு உதவுவதற்காக கட்டப்பட்டது போல் இருக்கிறது.

செயற்கைகோள் படங்களை வைத்து ஆராய்ந்ததில், அப்பாலம் சுமார் 400 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்டது. பாங்காங் டிசோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளுககு இடையே பாதுகாப்பு படை நடமாட்டத்திற்காக கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த பாலம் மூலம் டாங்கிகள் உட்பட அனைத்து வகையான ராணுவ வாகனங்களையும் இயக்கமுடியும். இல்லையெனில், ஏன் அவர்கள் இதை உருவாக்க போகிறார்கள். படைகளின் வரிசைப்படுத்தலை இந்த பாலம் எளிமையாக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.