சீதாபூர்: சமாஜ்வாடி மூத்த தலைவர் அசம்கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சீதாபூர் சிறையில் இருந்து நேற்று வெளியில் வந்தார். அசம்கானுக்கு எதிராக கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது பல்வேறு ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 89 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் அவர் பல வழக்குகளில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், 27 மாதங்களுக்கு பிறகு அசம்கான் நேற்று காலை சீதாபூர் சிறையில் இருந்து வெளியேறினார். அசம்கானை அவரது மகன் அப்துல்லா அசம், பிரகதிஷீல், மூத்த தலைவர் ஷிவ்பால் சிங் யாதவ் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.