மத்திய அரசு ஊழியர்களின் மாத அடிப்படை சம்பளத்தை 26,000 ரூபாயாக உயர்த்துவது குறித்த 7 பே கமிஷனின் பரிந்துரை குறித்த முக்கிய முடிவை மத்திய அமைச்சகம் விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல மத்திய அரசு ஊழியர்கள் ஃபிட்மெண்ட் ஃபேக்ட்டரையும் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஃபிட்மென்ட் காரணியை அரசு உயர்த்தினால், அதற்கேற்ப மத்திய அரசின் சம்பளமும் உயரும். ஆனால் இதில் அரசு இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் செம அறிவிப்பு..! #DA
குறைந்தபட்ச சம்பளம்
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளம் 18,000 ரூபாயாக உள்ளது. ஃபிட்மென்ட் காரணி அதிகரித்தால் அதுவே 26,000 ரூபாயாக உயரும்.
இப்போது ஃபிட்மென்ட் காரணி 2.57 மடங்காக உள்ளது. அது 3.68 மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஃபிட்மென்ட் காரணி உயர்வு?
மத்திய அரசு ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்தினால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆகிவிடும். உதாரணமாக, அரசு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18,000 எனில், அலவன்ஸ்கள் தவிர்த்து, 2.57 ஃபிட்மென்ட் காரணியின்படி, குறைந்தபட்ச சம்பளம் ரூ.46,260 (18,000 X 2.57 = 46,260) ஆக இருக்கும்.
ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக இருந்தால், சம்பளம் ரூ.95,680 ஆக உயரும் (26000X3.68 = 95,680).
7வது பே கமிஷன்
ஜூன் 2017 இல் மத்திய அமைச்சரவை 7வது பே கமிஷனின் பரிந்துரைகளுக்கு 34 மாற்றங்களுடன் ஒப்புதல் அளித்தது. புதிய ஊதிய விகிதங்கள் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை மாதம் ஒன்றுக்கு 7,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தும். மறுபுறம், உயர் மட்டத்தில், அதாவது செயலாளர், 90,000 ரூபாயிலிருந்து 2.5 லட்சமாக உயர்ந்தது. வகுப்பு 1 அதிகாரிகளுக்கு, ஆரம்ப சம்பளம் ரூ.56,100.
மத்திய அரசு
ஃபிட்மென்ட் காரணி குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. எப்போது முடிவு எடுக்கும் என தெரியவில்லை. எனவே மத்திய அரசு ஊழியர்கள் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
7th Pay Commission: Minimum pay to be hiked to Rs 26,000? Big decision on fitment factor soon
7th Pay Commission: Minimum pay to be hiked to Rs 26,000? Big decision on fitment factor soon| 7வது பே கமிஷன்: குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 ஆக உயர்த்தப்படுமா?