Snapdragon 7 Gen 1: உலகளவில் புராசஸர் தயாரிப்பில் முன்னணி வகித்து வரும் அமெரிக்க நிறுவனமான குவால்காம், ஸ்னாப்டிராகன் பெயரில் பல சிப்செட்டுகளை அறிமுகம் செய்துவருகிறது.
குறைந்த, நடுத்தர மற்றும் பிரீமியம் சிப்செட்களை நிறுவனம் சந்தையில் கொண்டுள்ளது. இந்நிலையில், நிறுவனம் புதிய பிளாக்ஷிப் சிப்செட்டை சமீபத்தில் வெளியிட்டது. ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், புதிய ஸ்மார்ட்போன்களில் நிறுவப்படவுள்ளது.
இந்த நேரத்தில் நிறுவனம் மேலும் ஒரு புதிய சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது. அதிதிறன் கொண்ட இந்த சிப்செட்டில், ஸ்மார்ட்போன் சூடாகாமல் தடுக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Call Recording: உங்கள் அழைப்பு ரகசியமாக பதிவுசெய்யப்படலாம் – எப்படி கண்டுபிடிப்பது?
ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் அம்சங்கள்
மிக முக்கியமாக இந்த சிப்செட் 4nm நானோ மீட்டரில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் பிளாக்ஷிப் அல்லாத சிப்செட், 4 நானோமீட்டரில் கட்டமைக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
குவால்காம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 புராசஸரின் கிளாக் வேகம் 2.4Ghz ஜிகாஹெர்ட்ஸ் ஆக இருக்கும். கிராபிக்ஸ் திறனை மேம்படுத்த Adreno 662 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது. பழைய புராசஸர்களை வைத்து ஒப்பீடு செய்தால், 7 ஜென் 1 20% விழுக்காடு வரை கூடுதல் கிராபிக்ஸ் திறனை வெளிப்படுத்தும்.” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், நிறுவனம் கொண்டுவந்திருக்கும் பிரேம் மோஷன் எஞ்சின், கேம்களின் பிரேம் ரேட்டுகளை மேம்படுத்தி, சக்தியை அதிகம் உறிஞ்சாமல் பார்த்துக்கொள்கிறது. இதுமட்டும் இல்லாமல், பல கூடுதல் அம்சங்களை இந்த புராசஸரில் குவால்காம் அறிமுகம் செய்துள்ளது.
Dangers Of Smartphones: தற்கொலைக்கு தூண்டுகிறதா ஸ்மார்ட்போன் பயன்பாடு – அதிர்ச்சி ரிப்போர்ட்!
200MP மெகாபிக்சல் கேமரா ஆதரவு
குவால்காம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கொண்ட எஞ்சின், 200MP மெகாபிக்சல் வரை கேமரா ஆதரவு வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வருங்கால 200MP மெகாபிக்சல் கேமரா போன்களை மனதில் வைத்து, இந்த சிப்செட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியிருக்கிறது.
அதுவும், சில நாள்களில் மிட்ரேஞ் ஸ்மார்ட்போன்களில் கூட, 200MP மெகாபிக்சல் கேமரா வந்துவிடும் என ஸ்னாப்டிராகன் நம்புகிறது. Qualcomm Spectra triple ISP தொழில்நுட்பமானது, இந்த 200MP படங்களை எடுக்க துணையாக இருக்கிறது. மேலும், 4K HDR தரத்தில் வீடியோக்களை எடுக்கவும் இது ஆதரவளிக்கிறது.
இதுமட்டும் இல்லாமல், 10-bit HEIC புகைப்படம், HEVC வீடியோ பதிவும் செய்ய முடியும். அதாவது, எடிட்டிங்கிற்கு பயன்படும் RAW வீடியோ அல்லது போட்டோக்களை எடுக்க இந்த சிப்செட் உதவியாக இருக்கும் என்று நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
Oppo Reno 8: இது சாம்சங் போனா… இல்ல ஒன்பிளஸ் போனானு நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
4.4Gbps வரை வேகம்
இதில் இருக்கும் ஸ்னாப்டிராகன் X62 5G மோடம் ஆனது, 4.4 Gbps வரை வேகத்தை நிர்வகிக்கும் திறன் கொடதாக இருக்கிறது. நெட்வெர்க் திறனை மேம்படுத்த இரட்டை 5ஜி ஆதரவும் இதில் உள்ளது. Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3 போன்ற இணைப்பு ஆதரவுகளையும் பெறுகிறது.
மேலும், இதில் ஸ்னாப்டிராகன் சவுண்ட், aptX போன்ற ஆடியோ ஆதரவும் இதில் உள்ளது. புதிதாக வரும் ஒப்போ ரெனோ 8 சீரிஸ் போன்கள் இந்த சிப்செட்டை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.