TRAI: நம்பர் இல்லணாலும் பராவால்ல… இனி அழைப்பவரோட ஆதார் பெயர் போன்ல காட்டும்!

TRAI: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (
TRAI
) விரைவில் அழைப்பாளர்களின்
KYC
அடிப்படையிலான பெயரை திரையில் காட்சியளிக்கும் வகையில் புதிய உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, நீங்கள் பதியாமல் வைத்திருக்கும் எண்ணில் இருந்து யாராவது உங்களை அழைத்தால், அவர்களின் எண் மட்டுமே திரையில் தோன்றும். ஆனால், TRAI இன் இந்த கட்டமைப்பை இறுதி செய்த பிறகு, தொலைபேசியில் பயனரின் KYC, அதாவது ஆதார் அட்டை அல்லது அதற்கு ஈடான அரசு ஆவணங்களில் உள்ள பெயரை பார்ப்பீர்கள்.

உறுதிபடுத்திய டிராய் தலைவர்

டிராய் தலைவர் பிடி வகேலா, “TRAI விரைவில் அழைப்பாளர்களின் KYC அடிப்படையிலான பெயர்களை ஃபோன் திரைகளில் காட்டுவதற்கான அமைப்புகளை உருவாக்கத் தொடங்கும். இந்த முறைக்குப் பிறகு, யாராவது உங்களை தொலைபேசியில் அழைத்தால், அவருடைய பெயர் திரையில் தோன்றும்.

இந்த அம்சம் உண்மையான அழைப்பைப் போலவே செயல்படும். இதற்கான பணிகளைத் தொடங்குமாறு தொலைத்தொடர்புத் துறையும் கூறியுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள் வரும் மாதங்களில் தொடங்கலாம்.” என்று தெரிவித்தார். இதற்கான பணிகள் வெகு விரைவில் தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.