இரண்டு பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியான இந்திய மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் ,இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவினால் ,வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிசிடம் கையளிக்கப்பட்டன..
கொழும்பில் இன்று (22) இடம்பெற் இந்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன, பிரதமரின் பணிக்குழாமின் தலைமை அதிகாரி திரு. சாகல ரத்நாயக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், உணவு. ஆணையர் திருமதி ஜே. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக மாநில அரசாங்கத்தால் இலங்கைக்கு வழக்கப்படவுள்ள உதவிப்பொருட்களின் முதற்கட்ட இந்த நிவாரண பொருள் தொகுதியில் 9 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் மருந்து பொருட்கள் உள்ளடங்குகின்றன.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த 18ம் திகதி இலங்கைக்கு இவற்றை அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.