இன்று இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது பெரும் பரிதாபதிற்குரிய நிலையில் உள்ளது எனலாம்.
பொருளாதாரம் வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம், கடன் பிரச்சனை, உற்பத்தி பாதிப்பு என பலவும் சந்தையில் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் போதிய அளவிலான உணவு பொருட்கள் இறக்குமதியின்மை, கடன் கட்ட முடியாமல் தவிக்கும் நிலை, சுற்றுலா பயணிகள் வரத்து குறைவு என பல பாதகமான காரணிகள் உள்ளன.
இதற்கிடையில் இலங்கையில் போராட்டங்கள் வெடித்தது போன்று மற்ற நாடுகளிலும் பிரச்சனை ஏற்படலாம் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நம்பிக்கையாக மாறிய சலீல் பரேக்..மீண்டும் MD&CEO ஆக நியமனம்..!
![பிரச்சனை ஏற்படலாம்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/qt-kristalina-georgieva-down-1653221020.jpg)
பிரச்சனை ஏற்படலாம்
மேலும் அரசுக்கு உணவு பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும். அப்படி இல்லையெனில் தற்போது ஏற்பட்ட இந்த பிரச்சனையானது மீண்டும் தொடரலாம் என எச்சரித்துள்ளது. இந்த நிகழ்வானது மற்ற நாடுகளிலும் நிகழக்கூடும் என ஐஎம்எஃப்-ன் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
![மானியம் வழங்கணும்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/sri-lanka-economic-crisis-2-1200x768-down-1650526362-1653221121.jpg)
மானியம் வழங்கணும்
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், மக்களின் வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர் என ஜார்ஜீவா கூறியுள்ளார். ஆக இப்பிரச்சனையில் இருந்து மீள நேரடியாக அவர்களுக்கு மானியம் அளிக்கப்பட வேண்டும்.
![இலங்கைக்கு உதவ வேண்டும்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653224410_293_npic-202213125941-1641225508.jpg)
இலங்கைக்கு உதவ வேண்டும்
அவ்வாறு வழங்கப்படவில்லை எனில் பிரச்சனைகள் தொடரக் கூடும். மேலும் பொருளாதாரத்தினை மேம்படுத்துதல் என்பனவற்றிற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். உக்ரைனுக்கு உலக நாடுகள் உதவ முன் வந்துள்ளதை போல இலங்கைக்கும் உதவ முன் வர வேண்டும். இலங்கை சர்வதேச சந்தையில் 47% கடன் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதில் 10% சீனாவுக்கு செலுத்த வேண்டியுள்ளது.
![போராட்டம்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/sri-lanka-crisis--1-1650131048331-1650345706809-down-1653221190.jpg)
போராட்டம்
விலைவாசி அதிகரிப்பு காரணமாக ஒரு புறம் ஏழை மக்கள் விலை வாசி ஏற்றத்துடன் போராடி வருகின்றனர். மேலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வணிகத்தினை ஆதரிக்க வேண்டும் என ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். அதோடு அரசுகள் எவ்வளவு கடன் வாங்குகிறார்கள், எவ்வளவு செலவு செலவழிக்கிறார்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
IMF warns of possible protests in other countries like Sri Lanka
The International Monetary Fund has warned that as protests erupt in Sri Lanka, problems could erupt in other countries as well.