கொழும்பு-இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா குறித்து, இன்று அமைச்சரவை பரிசீலிக்க உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில் அரசியல் சாசனத்தின், 19வது சட்ட திருத்தம், அதிபரை விட சர்வ வல்லமை உள்ள அமைப்பாக பார்லி.,க்கு அதிகாரம் வழங்கி இருந்தது. சட்ட திருத்தம்இந்நிலையில், 2019ல் இலங்கை அதிபராககோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்ற பின், 19வது சட்ட திருத்தத்தை நீக்கினார்.பார்லி.,யை விட அனைத்து அதிகாரங்களையும் அதிபருக்கு வழங்கும் அரசியல் சாசனத்தின் 20வது சட்ட திருத்தத்தை நிறைவேற்றினார்.
இந்நிலையில் இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு கோத்தபயராஜபக்சே அரசின் தவறான கொள்கை தான் காரணம் எனக் கூறி, அவர் பதவி விலகக்கோரி ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கட்சியினரின் ஆதரவுடன் இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரனில் விக்ரமசிங்கே, 20வது சட்ட திருத்தத்தை நீக்கி, அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து இன்று அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மசோதாஇந்த மசோதாவில் இரண்டு நாடுகளின் குடியுரிமை உள்ளவர் எம்.பி., பதவிக்கு போட்டியிட தடை விதிக்கும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தற்போதைய ஆணையங்களை வலுப்படுத்தி, அவற்றை சுதந்திரமாக செயல்பட வைக்கவும், மத்திய வங்கியை அரசியல் சாசன கவுன்சிலின் கீழ் கொண்டு வரவும் சட்ட திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement