மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனால், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பில் 157 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 32 பந்துகளில் இரண்டு 6, 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களை சேர்த்தார். தொடர்ந்து, ரோமாரியோ ஷெப்பர்ட் 26 ரன்கள் (நாட் அவுட்), வாஷிங்டன் சுந்தர் 25 ரன்கள், மர்க்ராம் 21 ரன்கள், திருப்பதி 20 ரன்கள், பிரியம் கார்க் 4 ரன்கள் மற்றும் புவனேஷ்வர் ஒரு ரன் எடுத்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் நாதன் எல்லிஸ் மற்றும் ஹார்ப்ரீட் பிரார் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரபாடா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் விளையாடி வருகின்றன.
இதையும் படியுங்கள்..
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு