மேற்கு வங்கத்தின் கிழக்கு மேதினிப்பூர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகளை வல்லுநர்கள் பாதுகாப்பாக வெடிக்கச் செய்து செயலிழக்க வைத்தனர்.
காட்டுப் பகுதியில் 15 பிளாஸ்டிக் டிரம்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் ஒரு சிலவற்றில் வெடிகுண்டுகள் இருப்பதை வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் வல்லுநர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை வயல்வெளிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வெடிக்கச் செய்து செயலிழக்கச் செய்தனர்.