கிரிப்டோ முதலீட்டில் சிறு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட முதலீடுகளின் அளவை பார்க்கும் போது பெரும் பணக்காரர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகம்.
பிட்காயின் உட்பட அனைத்து முன்னணி கிரிப்டோகரன்சியின் மதிப்புகள் தற்போது சரிந்துள்ள வேளையில் பில் கேட்ஸ் தற்போது தான் ஏன் கிரிப்டோகரன்சியில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் சமீபத்தில் Reddit தளத்தில் ‘Ask Me Anything’ என்ற கருத்து பரிமாற்றத்தில் தான் ஏன் கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்யவில்லை என்று விளக்கம் அளித்தார்.
அதில் பில் கேட்ஸ், “நான் முதலீடு செய்யும் பணத்திற்கு நல்ல மதிப்பை கொடுக்கும் வகையில், சிறந்த பலன்களை கொடுக்கும் விஷயங்களில் முதலீடு செய்யவே விரும்புகிறேன். நிறுவனங்களின் மதிப்பு என்பது அவர்கள் எவ்வாறு சிறந்த தயாரிப்புகளை கொண்டு வருகிறார்கள் என்பதை அடிப்படையில், அதன் மதிப்பு உயருகிறது. கிரிப்டோவின் மதிப்பு, என்பது பிறர் எந்த அளவிற்கு அதனை வாங்குகின்றனர், அவர்களிண்டிமாண்ட் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. எனவே மற்ற முதலீடுகளைப் போல இதில் முதலீடு செய்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. அதனால், இதுவரை ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை” என்றார்
பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தின் செயல்திறன், வருமானம், வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் பிட்காயின் சந்தையில் டிமாண்ட் அடிப்படையில் அதன் விலை தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Cryptocurrency முதலீட்டாளர்களுக்கு ஷாக்: 28% ஜிஎஸ்டி விதிக்க ஏற்பாடுகள்
கூடுதலாக, கிரிப்டோ என்பது ஒரு முதலீடு மட்டுமே, அதனைத் தான் ஒன்றும் இல்லை என்று அவர் விளக்கினார், அதை வேறு யாரோ ஒருவர், தீர்மானத்த படி நாம் பணம் செலுத்துகிறோம். வேறொருவரால் கட்டுப்படுத்தப்படும் விஷயங்களில் முதலீடு செய்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. எனவே மற்ற முதலீடுகளைப் போன்றது அல்ல இது. கூடுதலாக, கிரிப்டோவில் முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்களையும் அவர் எச்சரித்தார். இதில் கடுமையான நிதி இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால், BTC என்னும் பிட் காயினில் முதலீடு செய்யும் போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்தார்.
எலோன் மஸ்க்கை விட குறைவான பணம் உள்ள அனைவரும் டிஜிட்டலில் செய்யப்படும் இந்த முதலிட்டில் “மிகவும் கவனமாக இருங்கள்” என்று அவர் அறிவுறுத்தினார்.
டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி உட்பட உலகின் பணக்காரர்கள் பலர் கிரிப்டோகரன்சி மீதான் முதலீடுகளை பெரிய அளவில் ஆதரிப்பதோடு மட்டும் அல்லாமல் அதிகளவில் முதலீடும் செய்து வருகின்றனர். ஆனால், இதற்கு நேர் எதிராக மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர் கிரிப்டோ கரன்சியின் எதிர்காலத்தை மாற்றக் கூடும்: நிபுணர்கள்