கோலார் : கோலார் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதிய 272 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் தங்கவயலில் 26 பள்ளிகள் அடங்கும்.இதுவரை இல்லாத அளவுக்கு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாணவர்கள் அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கோலார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
கோலார் மாவட்டத்தில் 65 அரசுப்பள்ளிகள், 74 மானியம் பெறும் பள்ளிகள், 133 தனியார் பள்ளிகள் 272 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். கோலார் தாலுகாவில் அரசு பள்ளிகள் 7; மானியம் பெறும் பள்ளிகள் 34; தனியார் பள்ளிகள் 49 என மொத்தம் 90 பள்ளிகள் பங்கார்பேட்டை தாலுகாவில் அரசு பள்ளிகள் 9; மானியம் பெறும் பள்ளிகள் 17,
தனியார் பள்ளிகள் 27 என மொத்தம் 53 பள்ளிகள் தங்கவயல் தாலுகாவில் அரசு பள்ளிகள் 5; மானியம் பெறும் பள்ளிகள் 8; தனியார் பள்ளிகள் 13 என மொத்தம் 26 பள்ளிகள் சீனிவாசப்பூர் தாலுகாவில் அரசுப் பள்ளிகள் 17; மானியம் பெறும் பள்ளிகள் 4; தனியார் பள்ளிகள் 17 என மொத்தம் 38 பள்ளிகள் மாலுார் தாலுகாவில் அரசுப்பள்ளிகள் 17; மானியம் பெறும் பள்ளிகள் 4; தனியார் பள்ளிகள் 14 என மொத்தம் 38 பள்ளிகள் முல்பாகல் தாலுகாவில் அரசு பள்ளிகள் 10; மானியம் பெறும் பள்ளிகள் 7; தனியார் பள்ளிகள் 10 என மொத்தம் 27 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
Advertisement