வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5 டுவென்டி 20 மற்றும், இங்கிலாந்துக்கு எதிராக தள்ளி வைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்ரிக்க அணி, 5 டுவென்டி 20 போட்டிகளை விளையாட உள்ளது. ஜூன் 9 முதல் 19ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி:
* கே.எல்.ராகுல் (கேப்டன்)* ருத்துராஜ் கெய்க்வாட்* இஷான் கிஷான்* தீபக் ஹூடா* ஷ்ரேயாஸ் ஐயர்* ரிஷப் பண்ட் (துணை கேப்டன்)* தினேஷ் கார்த்திக்* ஹர்திக் பாண்ட்யா* வெங்கடேஷ் ஐயர்* சாஹல்* குல்தீப் யாதவ்* அக்ஷர் படேல்* ரவி பிஸ்னோய்* புவனேஷ்வர் குமார்* ஹர்ஷல் படேல்* ஆவேஷ் கான்* அர்ஷ்தீப் சிங்* உம்ரான் மாலிக்
மீண்டும் புஜாரா:
இதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டியில், 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், தள்ளி வைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான அணியில், விராத் கோஹ்லி மற்றும் அண்மையில் கவுன்டி கிரக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்து அசத்திய புஜாரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரஹானேவுக்கு இடம் கிடைக்கவில்லை.
டெஸ்ட் அணி:
* ரோஹித் சர்மா (கேப்டன்)* கே.எல்.ராகுல் (துணை கேப்டனர்)* சுப்மன் கில்* விராத் கோஹ்லி* ஷ்ரேயாஸ் ஐயர்* ஹனுமா விஹாரி* புஜாரா* ரிஷப் பண்ட்* கே.எஸ்.பரத்* ரவீந்திர ஜடேஜா* அஸ்வின்* ஷர்துல் தாக்கூர்* ஷமி* பும்ரா* சிராஜ்* உமேஷ் யாதவ்* பிரசித் கிருஷ்ணா
Advertisement