நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இதற்கமைவாக ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை வைப்பீடு செய்வோருக்கு 6 மாதங்களின் பின்னர் 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு சுங்கவரியற்ற அனுமதிச் சான்றிதழை வழங்குவதற்கு சபாநாயகர் பரிந்துரைத்துள்ளார்.
இதேபோன்று வாகனங்களுக்கான வரியாhக அரசாங்கத்திற்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களைச் செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் பணியாற்றும் அல்லது வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இந்த கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இரண்டு வருட காலத்திற்காக வைப்பீடு செய்யப்படும் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை நிரந்தர வைப்பீட்டிற்கான இந்தப் பயன்கள் கிடைக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வைப்பீடுகளுக்கு வருடத்திற்கு 10 சதவீத வட்டி வழங்கப்பட வேண்டும். இந்த வைப்பீடு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களிலிருந்து 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வகையில் அதிகரிக்க முடியும். சிறிய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் குறைந்த வைப்பீட்டை மேற்கொள்ளோருக்கு வட்டி நிவாரண ரீதியில் நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து முதலீடு மற்றும் செலவுகளுக்கு வரியிலிருந்து விடுவிப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.