நமது ஸ்மார்ட்போனுக்கு ஸ்பேம் கால் வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கண்டியும் வகையில், ட்ரூகாலர் செயலியை மொபைலில் இன்ஸ்டால் செய்து வருத்திப்போம். இச்செயலி மூலம், தெரியாத எண்ணிலிருந்து யாராவது உங்களை அழைத்தாலும், அந்த நபரின் பெயரை கண்டறியமுடியும். இருப்பினும், ட்ரூகாலர் செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக உலாவும் தகவல் காரணமாக, பெரும்பாலானோர் அதனை பயன்படுத்த ஒருவித தயக்கம் காட்டுகின்றனர்.
பொதுமக்களின் இத்தகைய பிரச்சினையை தீர்த்திட, மத்திய தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ட்ரூகாலர் மாற்றாக அதே சேவையை வழங்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
ட்ரூகாலர் செயலி தெரியாத நம்பரின் பெயரை வெளியிட்டாலும், அது அடையாள அட்டை உறுதியில்லாதது. சம்பந்தப்பட்ட நபர் எந்த பெயரில் இன்ஸ்டால் செய்தாரோ அல்லது அவரது நண்பர்கள் செவ் செய்ததன் அடிப்படையிலே நமக்கு பெயர் தோன்றும். இத்தகைய பயன்பாடுகள் மூலம் பெறப்படும் தகவல்கள் க்ரவுட் சோர்ஸ் ஆகும். அதில் கிடைக்கும் தகவல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது.
ஆனால் டிராய் உருவாக்கவுள்ள காலர் ஐடி வசதி, முற்றிலுமாக KYC அடிப்படையில் தகவலை தரக்கூடியது. KYC என்பது புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று அடிப்படையாக கொண்டது.
TRAI தலைவர் பிடி வகேலா கூறுகையில், ட்ரூகாலர் அம்சத்தை உருவாக்கும் பணி ஓரிரு மாதத்தில் தொடங்கிவிடும். உங்களுக்கு யாராவது கால் செய்தால், இனி KYC இல் குறிப்பிட்டுள்ள பெயர், திரையில் தோன்றும். தொலைத்தொடர்பு நிறுவனங்களால் செய்யப்படும் KYC க்கு இணங்க, தொலைபேசி திரையில் பெயர் தோன்றுவதை இந்த பிராசஸ் செயல்படுத்தும் என்றார்.
மேலும், இது ஒப்புதல் அடிப்படையிலான, தன்னார்வத் திட்டமாகும். தங்கள் பெயர்களைக் காட்டலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பெறுவார் என டிராய் கூறுகிறது. இதன் மூலம் ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க முடியும் என கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் முடிவு குறித்து பேசிய Truecaller செய்தி தொடர்பாளர், ” தகவல் தொடர்புகளை பாதுகாப்பாகவும் திறமையாகவும் மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்கிறோம். ஸ்கேம் அழைப்புகளின் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எண் அடையாளம் மிகவும் முக்கியமானது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த முக்கியமான பணிக்காக அயராது உழைத்து வருகிறோம்.ராயின் இந்த நடவடிக்கையை பாராட்டுகிறோம். எப்போதும் ஆதரவாக இருக்கிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்றார்.