குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டால் 21 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தலை உலகில் முதல் நாடாக பெல்ஜியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் அடையாளம் காணப்பட்ட குரங்கம்மை நோயானது தற்போது பிரித்தானியா, அமெரிக்கா, கனடா உட்பட 14 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலகின் முதல் நாடாக, monkeypox உறுதி செய்துகொண்டவர்கள் கண்டிப்பாக 3 வாரங்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பெல்ஜியத்தின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெல்ஜியத்தில் இதுவரை மூவருக்கு monkeypox தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிரித்தானியாவில் monkeypox பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அச்சப்படும் வகையில் அதிகரித்துள்ளது.
பிரித்தானிய சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவிக்கையில், இதுவரை மொத்தம் 20 பேர்களுக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய சிறார் ஒருவர் ஆபத்தான நிலையில் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் மேலும் 100 பேர்களுக்கு குரங்கம்மை நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களில் இந்த எண்ணிக்கையானது பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஏற்கனவே குரங்கம்மை சமூக பரவலாக மாறியுள்ளதாகவே நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.