திண்டுக்கல் அருகே ஓய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளரின் வங்கிக் கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில், ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வேடப்பட்டி பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் நடராஜன் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து, கொள்ளையர்களின் வங்கிக் கணக்கை உடனடியாக கண்டுபிடித்தனர்.
மேலும், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு லட்சத்து இருபத்தி ஒன்பது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு மொபைல் போனை ஆன் லைன் மூலம் ஆர்டர் செய்து உள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, மொபைல் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போலீசார் நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கொள்ளைபோன இரண்டு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தொகையில், ஒரு லட்சத்து இருபத்தி ஒன்பது ஆயிரம் ரூபாயை மீட்டு நடராஜனிடம் போலீசார் வழங்கினர்.