திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்தின் என்னை குழாயில் உடைப்பு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவாரூர் மாவட்டம், கமலாபுரம் பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைத்து, அதிலிருந்து எண்ணெய்கள் வெளியேறி விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கமலாபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம், அருள்ராஜ் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செல்லும் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பதியப்பட்டுள்ள எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இந்த கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்போது ஓஎன்ஜிசி அதிகாரிகள் தற்போது இது குறித்து நடவடிக்கை எடுக்க, நேரடி கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.