Indian squad announced for South Africa T20 series: தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதேபோல், இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டிக்கும் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களின் விவரத்தை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 5 டி20 போட்டிகள், ஜூன் 9 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடக்கிறது. டி20 தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். புதிதாக உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். டி20 அணியில் ருதுராஜ், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னோய் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
டி20 அணி விவரம்; கே.எல். ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
இதையும் படியுங்கள்: ராஜஸ்தான் வீரர்களுக்கு ஜெர்சியில் கையெழுத்திட்ட தோனி… நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!
அடுத்ததாக, இங்கிலாந்துடன் மாற்றியமைக்கப்பட்டுள்ள 5 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் அணி விவரம்; ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சேதேஷ்வர் புஜாரா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா.