பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு
மாநாடு படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான முப்தி என்ற கன்னட படத்தின் ரீமேக்கான பத்து தல படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கிறார் சிம்பு. இப்படத்தில் சிம்பு கேங்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.
ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். பத்து தல படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது. இந்த படத்தில் ஏ.ஜி.ஆர் கேரக்டருக்காக தனது கெட்டப்பை சிம்பு மாற்றியுள்ளார். பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் வரும் 27ம் தேதி முதல் சிம்பு நடிக்கும் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தனது மெலிந்த தோற்றத்தில் இருந்து மீண்டும் உடல் எடையை அதிகரிக்க செய்து புது லுக்கில் காட்சியளிக்கிறார்,