பிடன் அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்.. எப்படி எதிர்கொள்ளப் போகிறது அமெரிக்கா?

அமெரிக்காவில் தொடர்ந்து ப்ணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது வேலையிழப்பினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மெதுவான வளர்ச்சி, ரெசசன் என பல புதிய பல தலைவலிகளை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது அமெரிக்க அரசுக்கு பல புதிய பிரச்சனைகளை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்க அரசு பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் தான், பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இது வரவிருக்கும் கூட்டத்திலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார வாகனங்கள் உற்பத்திக்காக முதலீடு.. LML-ன் பிரம்மாண்ட திட்டம்..!

40 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சம்

40 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சம்

அமெரிக்காவில் பணவீக்க விகிதமானது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இந்த நெருக்கடியான நிலையானது 2023ம் ஆண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியில் புதிய தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் அதிகரிக்கலாம்

பணவீக்கம் அதிகரிக்கலாம்

இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக ரஷ்யா உக்ரைன் பிரச்சனையானது, தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து தொடர்ந்து வருகின்றது. இது மேற்கொண்டு சர்வதேச அளவில் பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கொரோனாவும் தொடர்ந்து அடுத்தடுத்த அலையான உருவெடுத்து வருகின்றது. இதுவும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

சில தலைவலிகள்
 

சில தலைவலிகள்

அமெரிக்க அரசு வலுவான வளர்ச்சியினை உருவாக்கவும், பொருட்கள் விலையை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எனினும் பொருளாதாரம் சில தலைவலிகளை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக அமெரிக்க அரசு இரண்டு தடைகளை எதிர்கொண்டு வருகின்றது. பொருளாதாரத்தின் திசையை மாற்றுவது என்பது அரசின் கட்டுப்பாட்டில் ஒரளவு மட்டுமே முடியும்.

பணவீக்கத்தினால் என்ன பிரச்சனை?

பணவீக்கத்தினால் என்ன பிரச்சனை?

மத்திய வங்கியோ பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகின்றது. சமீபத்தில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வருவதில், சில வலிகள் இருக்கலாம். இதனால் வேலையின்மை விகிதம் அதிகரிக்கலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்கு சந்தைகள் பலத்த சரிவு

பங்கு சந்தைகள் பலத்த சரிவு

இதே கருவூல செயலர் ஜேனட் யெல்லன், உலக பொருளாதாரத்திற்கான கண்ணோட்டம் சவாலானது. அதிக உணவு மற்றும் எரிசக்தி விலைகள் அதிக பணவீக்கத்தினை தூண்டலாம். இது பலவீனமான வளர்ச்சியினை தூண்டலாம். இதன் காரணமாக கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இது கடந்த வாரத்தில் அமெரிக்க பங்கு சந்தைகள் கடுமையான வீழ்ச்சி காண வழிவகுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Challenges awaiting US President Joe Biden’s government

As inflation continues to rise in the United States, it is expected to increase unemployment. It is expected that the slower the development, the more likely it is that several new headaches will develop.

Story first published: Sunday, May 22, 2022, 22:26 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.