வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனின், போரோ ஆப் சவுத்வார்க் மேயராக சுனில் சோப்ரா இரண்டாவது முறையாக தேர்வாகி உள்ளார்.
டில்லியில் பிறந்தவரான சுனில் சோப்ரா நேற்று மத்திய லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் மேயராக பதவியேற்று கொண்டார். இதற்கு முன்னதாக அவர் 2014 – 15 காலத்தில் அந்நகர மேயராக இருந்துள்ளார். 2013- 14ல் துணை மேயராகவும் பதவி வகித்துள்ளார். போரோ ஆப் சவுத்வார்க் நகரின் மேயர் பதவியை வகித்துள்ள முதலாவது இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. இந்நகரில் இந்திய வம்சாவளியினர் 2 சதவீதம் பேர் மட்டுமே வசித்து வருகின்றனர்.
கடந்த 2010ம் ஆண்டில் அரசியலில் நுழைந்த சோப்ரா, முதலில் 2014ல் மேயராக தேர்வானார். 3 முறை துணை மேயராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 1979ல் பிரிட்டன் சென்ற சோப்ரா, அங்கு ரீடெயில் கடையை துவங்கி தனது வாழ்க்கையை துவக்கினார். குழந்தைகள் உடைகள் மற்றும் தயாரிப்பு விற்பனையில் ஈடுபட்டு முன்னேறினார். அதேநேரத்தில், இந்திய கலாசாரத்தை பிரபலப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/gallerye_181705740_3035707.jpg)
கடந்த 1973- 74 ல் டில்லி பல்கலையன் சுப்ரீம் கவுன்சிலர் பதவியையும், பின்னர் தேசிய மாணவர் சங்கத்தின் டில்லி தலைவராகவும் சுனில் சோப்ரா பதவி வகித்துள்ளார்.
Advertisement