புடினுக்கு உக்ரைன் அடிப்பணிய வேண்டும்…கரவொலிகளுக்கு மத்தியில் போலந்து ஜனாதிபதி பேச்சு!


உக்ரைனின் எதிர்காலத்தை முடிவு செய்வதில் உக்ரைனுக்கு மட்டுமே உரிமை உள்ளது என போலந்து ஜனாதிபதி Andrzej Duda தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போரானது 88வது நாளாக நடைப்பெற்று வரும் நிலையில், பிப்ரவரி 24க்குப் பிறகு உக்ரைன் நாடாளுமன்றத்தில் முதல் வெளிநாட்டு தலைவராக போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா ஞாயிற்றுக் கிழமையான இன்று உரையாற்றினார்.

அப்போது நாடாளுமன்றத்தில் பேசிய ஆண்ட்ரெஜ் டுடா, புடினின் கோரிக்கைகளுக்கு உக்ரைன் அடிப்பணிய வேண்டும் என சில கவலைக் குரல்கள் தோன்றியுள்ளன, ஆனால் உக்ரைனின் எதிர்காலத்தை முடிவு செய்வதில் உக்ரைனுக்கு மட்டுமே உரிமையுள்ளது மற்றும் நீங்கள் இல்லாமல் உங்கள் தொடர்பான எந்த முடிவும் இல்லை என உக்ரைன் நாடாளுமன்றத்தின் கரவொலிக்கு மத்தியில் தெரிவித்தார்.

அத்துடன் உக்ரைன் பிரதேசத்தில் இருந்து ரஷ்யாவை முழுவதுமாக வெளியேற்ற சர்வதேச சமூகம் முன்வர வேண்டும், பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக உக்ரைன் தியாகம் செய்யப்பட்டால், உக்ரைன் இழந்த ஒற்றை சென்டிமீட்டர் இடம் கூட உக்ரைனுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கும் பெரும் அடியாக அமைந்து விடும் என ஆண்ட்ரெஜ் டுடா தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நிலத்தை விட்டுக் கொடுக்கும் அமைதி பேச்சிவார்த்தை நிராகரித்த உக்ரைன், தங்களது நிலப்பரப்பில் ரஷ்ய ராணுவம் இருக்கும் ஒவ்வொரு கூடுதலான நேரங்களும் ரஷ்யா தனது படைகளை மீண்டும் கட்டமைக்க உதவும் என உக்ரைன் எச்சரித்தாகவும் போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா தெரிவித்துள்ளார்.

புடினுக்கு உக்ரைன் அடிப்பணிய வேண்டும்...கரவொலிகளுக்கு மத்தியில் போலந்து ஜனாதிபதி பேச்சு!PHOTO CREDITS: REUTERS

கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய படைகளை கதிகலங்க வைத்த உக்ரைன்…அதிரடியான ட்ரோன் தாக்குதல் வீடியோ!

இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கும் போலந்து அதன் முழு ஆதரவையும் வழங்கும் என்றும் தனது நாடாளுமன்ற உரையில் ஆண்ட்ரெஜ் டுடா தெரிவித்தார்.

புடினுக்கு உக்ரைன் அடிப்பணிய வேண்டும்...கரவொலிகளுக்கு மத்தியில் போலந்து ஜனாதிபதி பேச்சு!PHOTO CREDITS: REUTERS



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.