ஜகார்த்தா-இந்தோனேஷியாவில் புதுமணத் தம்பதியர், திருமண நாளில் இருந்து மூன்று நாட்களுக்கு கழிப்பறை பயன்படுத்த தடை விதிக்கும் வினோத பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் திடாங் என்ற பழங்குடியின சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இந்த சமூகத்தில் பல வினோத பழக்கங்கள் உள்ளன; அதில் ஒன்று கழிப்பறை பயன்படுத்த தடை விதிப்பது. அதாவது, புதுமணத் தம்பதி திருமணம் நடந்த நாளில் இருந்து மூன்று நாட்களுக்கு கழிப்பறைக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
இந்தக் கட்டுப்பாட்டை மீறினால் விவாகரத்து, பிறக்கும் குழந்தைகள் உடனே மரணம் அடைவது போன்ற துர்சம்பவங்கள் நடக்கும் என திடாங் சமூகத்தினர் நம்புகின்றனர்.இதனால், புதுமண தம்பதியை உறவினர்கள் மூன்று நாட்களுக்கு தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருக்கின்றனர். அந்த நாட்களில் உணவு மற்றும் குடிநீர் மிகக்குறைந்த அளவுதான் வழங்குகின்றனர். கட்டுப்பாடு முடிந்ததும், புதுமணத் தம்பதி குளித்து புத்தாடை அணிந்து அதை ஒரு விழாவாக கொண்டாடுகின்றனர். இந்த வினோத பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
Advertisement