பூண்டு தோல் உரிக்க சிம்பிள் வழி… இதை எப்பவாவது யோசிச்சீங்களா?

வீட்டில் இல்லத்தரசிகளுக்கு பெரும்பாலும் சமைப்பதே முக்கிய வேலையாக இருக்கும். இந்த நேரத்தில் அடுப்படியில் இருக்கும் சின்னச்சின்ன வேலைகள் கூட் அவர்களுக்கு பெரிய மலைப்பாக தெரியும். அதிலும் பூண்டு உரிப்பது போன்ற வேலைகள் எல்லாம் வந்துவிட்டால் அவர்கள் கடுப்பின் உச்சத்திற்கே சென்றுவிடுவார்கள். ஆனால் சில ஐடியாக்களை தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் பல வேலைகளை சுலபமாக செய்யலாம்.

ஐடியா 1 : வீட்டில் இருக்கும் சர்க்கரை டப்பாவில் திடீரென ஈரப்பதம் இருந்தால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டாம். உடனே ஒரு கொட்டாங்குச்சியை எடுத்து (தேங்காய் ஓடு) அதில் வைத்துவிட்டால் சர்க்கரையில் உள்ள ஈரப்பதத்தை தேங்காய் கொட்டாங்குச்சி ஈர்த்துக்கொள்ளும்.

ஐடியா 2 : மிக்ஸி ஜார், குக்கரின் கேஸ்கட் மற்றும் விசில் ஆகியவற்றை சுத்தம் செய்யும்போது வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு வினிகர் சேர்த்து சுத்தம் செய்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் எளிதில் சுத்தமாகும். வினிகருக்கு பதிலாக எலுமிச்சை சாறையும் பயன்படுத்தலாம்.

ஐடியா 3 : பூண்டின் தோலை உறிக்க சாப்பாட்டிற்கு உலை வைக்கும்போது அதன் மூடிப்பகுதியில் உதிரியாக பூண்டை வைத்து விட்டு 5 நிமிடங்கள் கழித்து எடுத்து உரித்தால் சுலபமாக உறிக்கலாம். அதிகம் பூண்டை உரிக்க வேண்டும் என்றால் இந்த வழியை பயன்படுத்தலாம்.

ஐடியா 4 : உடைத்த தேங்காயின் உட்பகுதியில் எலுமிச்சை சாறை தடவி பாலித்தீன் பையில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துவிட்டர் ஒருவாரம் வரை கெடாமல் இருக்கும். வெளியில் வைக்க வேண்டும் என்றால் உப்பு தண்ணீரில் போட்டு வைக்கலாம். தினமும் தண்ணீரை மாற்ற மறந்துவிடாதீர்கள்.

ஐடியா 5 : கொதிக்கும் தண்ணீரில் சில எலுமிச்சை துண்டுகளை சேர்த்து அதனுடன், பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்வீட் கொஞ்சம், சோடா உப்பு கொஞ்சம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால் பாத்திரம் தேய்த்த பிறகு சிங்கிள் ஸ்ப்ரே செய்து சுத்தம் செய்து விட்டால் ஒரு கரப்பான் பூச்சி, எறும்பு கூட வீட்டிற்குள் வராது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.