அடையாளம் தெரியாத வாகனம் மோதி சகோதர்கள் பலியான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், களிமங்கலத்தைச் சேர்ந்த சகோதரர்களான நியாஸ் லுக்மான் மற்றும் அவரது தம்பி இஜாஸ் இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில், அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அடையாளம் தெரியாத வாகனன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.