எல் எம் எல் எலக்ட்ரானிக்ஸ்(Lohia Motors Ltd) நிறுவனம் 350 கோடி ரூபாய் முதலீட்டினை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முதல் முறையாக 350 கோடி ரூபாய் முதலீட்டினை நாங்கள் செய்ய பார்க்கிறோம். இந்த முதலீட்டின் மூலம் அதன் உற்பத்தியினை விரிவாக்கம் செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கை.. சாமானியர்கள் மத்தியில் எந்தளவுக்கு பலன் அளிக்கும்?
பல முதலீட்டு திட்டங்கள்
இதன் மூலம் புதிய உற்பத்தி வசதிகள் உள்ளிட்டவற்றை பலவும் செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனம் பல பெரிய முதலீட்டாளார்களிடம் இருந்து பல முதலீட்டு திட்டங்களை பெற்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு செப்டம்பரில் அதன் தயாரிப்புகளை வெளியிட்ட பின்னரே அதுபற்றி திட்டமிடும் என அவர் கூறினார்.
பல மாநிலங்களில் இருந்து அழைப்பு
எல் எம் எல் எலக்ட்ரானிக்ஸ் இதுவரை தாய் நிறுவனமான எஸ்ஜி (SG) கார்ப்பரேட் மொபைலிட்டி மூலம் நிதியளிக்கப்பட்டுள்ளது என, இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான யோகேஷ் பாட்டியா கூறியுள்ளார். மேலும் 2 – 3 மா நிலங்களில் இருந்து புதிய உற்பத்தி ஆலையை தொடங்க அழைப்பு விடுப்பட்டுள்ளது.
இலக்கு
நாங்கள் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். ஒரு வருடத்திற்கு 1 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இது சந்தை தேவைக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்யும். ஆக அப்படி ஒரு ஆலையை அமைக்க 18 – 24 மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.
சார்ஜிங் உள்கட்டமைப்பு திட்டம்
இந்த மூன்று தயாரிப்புகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு இலக்காக கொண்டது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளை இலக்காக கொண்டவை என பாட்டியா கூறியுள்ளார். எல்எம்எல் எலக்ட்ரானிக் நிறுவனமானது, நாட்டில் மின்சார வாகனங்களை ஏற்றுக் கொள்வதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகளையும் திட்டமிட்டு வருவதாக பாட்டியா கூறினார்.
வெஸ்பா வெளியீடு
மேலும் 835 மாவட்டங்களில் ஸ்டுடியோ கம் பிரான்சிகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக அமையும்.
கான்பூரை சேர்ந்த லோஹியா மோட்டார்ஸ் நிறுவனம், இத்தாலியின் பியாஜியோ மற்றும் சிஸ்பாவுடன் இணைந்து வெஸ்பா ஸ்கூட்டரை தயாரித்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் மின்சார வாகனங்களுடன் சந்தையில் நுழையும் திட்டத்தினையும் நிறுவனம் அறிவித்தது.
3 வகையான வாகனங்கள்
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த நிறுவனம் ஒரு ஹைப்பர் பைக்ம் ஒரு இ பைக், மற்றும் ஒரு மின்சார ஸ்கூட்டர் என 3 வாகனங்களை வெளியிடவுள்ளர்தாகவும் அறிவித்தது. இதனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே வெளியிட இருப்பதாகவும் அறிவித்தது.
LML Electronics plans to invest Rs.350 crore in product expansion manufacturing
LML Electronics (Lohia Motors Ltd) has announced an investment of Rs 350 crore. It also said it would launch a new manufacturing plant.