ரோசாவ் : வங்கி கடன் மோசடியில் தலைமறைவான நகை கடை அதிபர் மெஹுல் சோக்சி மீது சட்ட விரோதமாக டொமினிகன் நாட்டில் நுழைந்தது தொடர்பான வழக்கை திரும்பப் பெறுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.மும்பையைச் சேர்ந்த நகை கடை அதிபர்கள் மெஹுல் சோக்சி, நிரவ் மோடி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து, இந்தியாவில் இருந்து தப்பியோடினர்.
இதில், நிரவ் மோடி லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மெஹுல் சோக்சி, வட அமெரிக்காவில் இருக்கும் கரீபிய தீவு நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்நிலையில் மெஹுல் சோக்சி, ஆன்டிகுவாவில் இருந்து டொமினிகன் நாட்டிற்கு சட்ட விரோதமாக வந்ததாக அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், தன்னை போலீஸ் அதிகாரிகள் வேடத்தில் வந்த சிலர், ஆன்டி குவாவில் இருந்து கடத்தி வந்து டொமினிகனில் அடைத்து வைத்திருந்ததாக, மெஹுல் சோக்சி தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கு ‘ஜாமின்’ வழங்கப்பட்டது. இந்நிலையில் டொமினிகன் அரசு, மெஹுல் சோக்சி மீதான சட்ட விரோத குடியேற்ற வழக்கை திரும்பப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
Advertisement