இந்திய மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திடீரென மத்திய அரசு நேற்று எரிபொருள்கள் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால் 45 நாட்களுக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பெட்ரோல் விலையானது 100 ரூபாய்க்கு மேலாகவே இருந்து வந்தது. பல மாநிலங்களில் வரி விகிதம் என்பது குறைக்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசு குறைக்காமல் மெளனம் காத்து வந்தது.
இதன் காரணமாக பல மாநிலங்களிலுன் பெட்ரோல் விலையானது 100 ரூபாயாக மேலாக இருந்து வந்தது. இந்த நிலையில் தான் நேற்று வரி குறைப்பு பற்றிய அறிவிப்பினை கொடுத்தது.
மத்திய அரசை தொடர்ந்து கேரளாவும் பெட்ரோல் விலையை குறைத்தது.. தமிழ்நாடு குறைக்குமா?
அரசுக்கு இழப்பு
பெட்ரோலுக்காக லிட்டருக்கு 9.5 ரூபாய்க்கும், டீசலுக்கு 7 ரூபாய் என்ற அளவுக்கும் குறைத்துள்ளது. அரசின் இந்த வரி குறைப்பு காரணமாக ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வரி குறைப்பு செய்யாத மாநிலங்கள், இதேபோன்று வரி குறைப்பினை செய்ய வேண்டும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
சிலிண்டர் மானியம்
அரசின் சிலிண்டர் திட்டமான உஜ்வாலா பயனாளிகளுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு 200 மானியம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் அரசுக்கு 6100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் விலை எங்கு குறைவு?
பெட்ரோல் விலையானது 100 ரூபாய்க்கு கீழாக பல நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக டெல்லியில் 96.72 ரூபாய்க்கும், நொய்டாவொல் 97 ரூபாய்க்கும், சண்டிகாரில் 96.20 ரூபாய்க்கும், குர்கானில் லிட்டருக்கு 97.18 ரூபாய்க்கும், லக்னோவில் 96.57 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
நாட்டில் மிகக் குறைவாக சண்டிகாரிலும், அதன் பிறகு லக்னோவிலும், அதன் பிறகு டெல்லி, குர்கான், நொய்டா உள்ளிட்ட நகரங்களிலும் 100 ரூபாய்க்கு கீழாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
டீசல் விலை எங்கு குறைவு?
டீசல் விலையை பொறுத்தவரையில் 90 ரூபாய்க்கு கீழாக டெல்லியில் 89.62 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே பெங்களூரில் 87.89 ரூபாய்க்கும், சண்டிகாரில் 84.26 ரூபாய்க்கும், லக்னோவில் 89.76 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் குறைந்தபட்சமாக சண்டிகாரிலும் அதன் பிறகு பெங்களூரிலும், பிறகு லக்னோவிலும் குறைவாக உள்ளது.
கேஸ் விலை எங்கு குறைவு?
கேஸ் விலையினை பொறுத்த வரையில் முக்கிய நகரங்களில் 1000 ரூபாய்க்கு மேலாகவே இருந்து வருகின்றது. இதில் நெய்டாவில் 1000.50 ரூபாய்க்கும், டெல்லியில் 1003 ரூபாய்க்கும், பெங்களூரில் 1005.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது சென்னையில் 1018.50 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் என்ன நிலவரம்
பெட்ரோல் விலை
சென்னை – ரூ.102.63
கோவை – ரூ.103.11
ஈரோடு – ரூ.103.34
மதுரை – ரூ.103.22
சேலம் – ரூ.103.43
தேனி – ரூ.103.88
திருப்பூர் – ரூ.103.13
தஞ்சாவூர் – ரூ.103.61
வேலூர் – ரூ.104.01
விழுப்புரம் – ரூ.104.30
தூத்துக்குடி – ரூ.103.40
டீசல் விலை
சென்னை – ரூ.94.24
கோவை – ரூ.94.73
ஈரோடு – ரூ.94.95
மதுரை – ரூ.94.95
சேலம் – ரூ.95.04
தேனி – ரூ.95.50
திருப்பூர் – ரூ.94.75
தஞ்சாவூர் – ரூ.95.23
வேலூர் – ரூ.95.58
விழுப்புரம் – ரூ.95.86
தூத்துக்குடி – ரூ.95.05
Petrol prices are lower in which state after tax cut? know fuel rates in your city
In which state is petrol price cheaper? What is the situation in Chennai?