அதானி குழும பங்குகள் கடந்த சில காலாண்டுகளாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுக்கும் பங்குகளாக இருந்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டில் மல்டிபேக்கர் பங்குகளில் அதானி குழும பங்குகள் சிலவும் உள்ளன.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனமாகும்.
இது அதன் முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட சில ஆண்டுகளில் நல்ல லாபம் கொடுத்த பங்குகளில் ஒன்றாகவும் இருந்து வருகின்றது.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. விலை உயர்வில் லாபம் பார்க்கும் அம்பானி, அதானி!
நல்ல ஏற்றம்
அதானி கிரீன் எனர்ஜி கடந்த 3 ஆண்டுகளில் 37.40 ரூபாயில் இருந்து, 2279 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது சுமார் 6000% ஏற்றம் கண்டுள்ளது. இது பங்குதாரர்களுக்கு இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் மிகப்பெரிய லாபத்தினை கொடுத்துள்ளது. எனினும் கடந்த ஒரு மாத காலமாக சற்றே தடுமாற்றம் கண்டு வருகின்றது. எனினும் நடப்பு ஆண்டில் நல்ல லாபத்தினை கொடுத்துள்ளது.
61 மடங்கு லாபம்
இது 1347 ரூபாயில் இருந்து 2279 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 70% ஏற்றம் கண்டுள்ளது. இதுவே கடந்த 6 மாதத்தில் இப்பங்கானது 75% லாபம் கொடுத்துள்ளது.
கடந்த மே 17 , 2019 அன்று இப்பங்கின் விலையானது 37.40 ரூபாயாக என்எஸ்இ-யில் இருந்தது. கடந்த அமர்வில் இப்பங்கின் விலையானது 2279 ரூபாயாக முடிவடைந்துள்ளது. ஆக இந்த மூன்று ஆண்டுகளாக இடைவெளியில் முதலீட்டாளர்களுக்கு 61 மடங்கு லாபம் கொடுத்துள்ளது.
லட்சாதிபதியாக அதானி கொடுத்த சான்ஸ்
முதலீட்டாளர்கள் இப்பங்கின் 1 மாதம் முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 80,000 ரூபாயாகும். இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 1.70 லட்சம் ரூபாயாகும். இதே ஒரு வருடம் முன்பு இப்பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 1.75 லட்சம் ரூபாயாகும். இதே 3 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 61 லட்சம் ரூபாய்க்கு மேல்.
பங்கு விலை நிலவரம்
அதானி கிரீன் எனர்ஜியின் சந்தை மதிப்பானது கடந்த வெள்ளிக்கிழமை அமர்வின் படி, 3,60,153 கோடி ரூபாயாகும். இதன் புத்தக மதிப்பு ஒரு பங்குக்கு 16.62 ரூபாயாகும்.
கடந்த அமர்வில் இப்பங்கின் விலையானது என் எஸ் இ-யில் 1.89% குறைந்து, 2273.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 3050 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச பங்கு விலை 874.80 ரூபாயாகும்.
Rs.37 to Rs2279; This adani group stock turns Rs1 lakh to Rs.61 lakh in just 3 years
Adani Green Energy has increased from Rs. 37.40 to Rs. 2279 in the last 3 years. It has seen an increase of about 6000%.