Bill Gates: தல… என்ன போன் வெச்சிருக்கார் தெரியுமா – ஆனா சத்தியமா நீங்க நெனச்சது இல்ல!

உலகளவில் உள்ள மக்களிடத்தில் இந்த எண்ணம் மட்டும் ஒரே மாதிரியாக இருக்கும். பணக்காரர்களின் போன் ஐபோன் என்றும், ஏழைகளின் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு என்றும் அவர்கள் மனதில் பதிய வைத்துள்ளனர்.

உண்மையில் இப்படிப்பட்ட சொல்லாடல்களை மாற்றியமைத்தவர்கள் உண்டு. ஏனென்றால் நீங்கள் நினைத்திருப்பது உண்மையல்ல என்பது இந்த செய்தி வாயிலாக உங்களுக்குத் தெரியவரும். இது உங்களை ஆச்சரியத்திலும் ஆழ்த்தலாம்.

பிரபல டெலிகிராம் நிறுவனத்தின் தலைவர் (Pavel Durov) ஐபோன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். இந்த நிலையில் தான் பிரபலங்களின் ஸ்மார்ட்போன் பட்டியல் குறித்து அலசவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

VIP Number: விஐபி நம்பரை வீட்டுக்கே வந்து இலவசமாக தரும் வோடபோன் ஐடியா!

பில் கேட்ஸ் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்

இந்த நேரத்தில் தான் உலகப் பணக்காரர்களில் ஒருவரான முன்னாள் மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் எந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவார் என்று நினைக்கத் தோன்றியது. தேடலில் கிடைத்த தகவல் என்னை ஆச்சரியப்பட வைத்தது என்றே சொல்லலாம்.

ஆம், பில் கேட்ஸ் கையில் எப்போதும் இரண்டு போன்களை வைத்திருக்கிறார். அதில் ஒன்று ஐபோன் அதாவது ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கக்கூடியதும், மற்றொன்று ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கக்கூடியதும் ஆகும்.

TRAI: நம்பர் இல்லணாலும் பராவால்ல… இனி அழைப்பவரோட ஆதார் பெயர் போன்ல காட்டும்!

இதில் அவர் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மடிக்கக்கூடிய போன் என்பது தெரியவந்துள்ளது. “
Samsung Galaxy Z Fold 3
” ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் பிரிமியம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு குறித்து பில் கேட்ஸ்

இது குறித்து பேசியிருக்கும் பில் கேட்ஸ், “ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பல மூன்றாம் தரப்பு செயலிகளைப் பயன்படுத்த முடிகிறது. உண்மையில், பல வருடங்களாக ஐபோன் பயன்படுத்தி வந்த நான், புதிதாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த மிகவும் சிரமப்பட்டேன்.

தற்போது, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் எனக்கு மிகவும் பழக்கமாகி விட்டது. நான் எனது முதன்மை போனாக சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனையே பயன்படுத்துகிறேன்.” என்று கூறியிருக்கிறார்.

BSNL Recharge: ஜியோவை விரட்டியடிக்கும் பிஎஸ்என்எல்-இன் அதிரடி ரீசார்ஜ் திட்டங்கள்

சாம்சங் நிறுவனம் இதுகுறித்து பெருமை கொள்ள வேண்டும். ஏனென்றால், மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 (
Microsoft
Surface Duo 2) எனும் தான் கட்டி வளார்த்த நிறுவனத்தின் மடிக்கக்கூடிய டேப்லெட்டைப் பயன்படுத்தாமல், இவர் சாம்சங் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளார்.

Dangers Of Smartphones: தற்கொலைக்கு தூண்டுகிறதா ஸ்மார்ட்போன் பயன்பாடு – அதிர்ச்சி ரிப்போர்ட்!

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 அம்சங்கள் (Samsung Galaxy Z Fold 3 Specifications)

இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 7.6″ இன்ச் AMOLED 2X டிஸ்ப்ளே, 6.2″ இன்ச் கவர் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 ஆக்டாகோர் புராசஸர், 12ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, பின்பக்கம் மூன்று கேமராக்கள், செல்பிக்காக இரண்டு கேமராக்கள், 4,400mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளது.

Samsung-Galaxy-Z-Fold-3 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Qualcomm Snapdragon 888டிஸ்பிளே7.6 inches (19.3 cm)சேமிப்பகம்256 GBகேமரா12 MP + 12 MP + 12 MPபேட்டரி4400 mAhஇந்திய விலை149999ரேம்12 GBமுழு அம்சங்கள்
Samsung-Galaxy-Z-Fold-3G302064

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.