அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கிலிருந்து பிற வங்கி வாடிக்கையாளர்களுக்கு NEFT, RTGS வசதி மூலம் பணம் பரிவத்தனை செய்யலாம் என மே 17-ம் தேதி அறிவிப்பு வெளியானது.
அதை தொடர்ந்து இந்த வசதியை அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் மே 18-ம் தேதி முதல் ஆரம்பம் ஆகியுள்ளது.
மேலும் 2022, மே 31-ம் தேதி முதல் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் ஆர்டிஜிஎஸ் சேவை மூலமாகவும் பணம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEFT என்றால் என்ன?
24 மணி நேரமும் ஒரு வங்கி கணக்கிலிருந்து எந்த ஒரு வங்கி கணக்கிற்கு வேண்டுமானாலும் இணையதள வங்கி சேவை மூலம் பணம் அனுப்பும் வசதியே NEFT. குறைந்தது 1 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரையில் NEFT பரிவர்த்தனையால் செய்யலாம். வங்கிக் கிளை மூலம் NEFT பரிவர்த்தனை செய்யும் போது 15 லட்சம் ரூபாய் வரையில் அனுப்பலாம்
அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் NEFT பரிவர்த்தனை செய்ய கட்டணம் எவ்வளவு?
ரூ.10,000 வரையில் அனுப்ப ரூ.2.50 + ஜிஎஸ்டி
10,001 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அனுப்ப ரூ.5 + ஜிஎஸ்டி
1 லட்சத்து 1 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அனுப்ப ரூ.15 + ஜிஎஸ்டி
ரூ.2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக அனுப்பும் போது ரூ.25 + ஜிஎஸ்டி
வாடிக்கையாளர் சேவை எண்?
அஞ்சல் அலுவலக இணைய வங்கி கணக்கிலிருந்து பணம் அனுப்பும் போது வரும் பிரச்சனைகளை 1800 2666 868 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
இணையதளம் முலம் புகார் அளிப்பது எப்படி?
https://www.indiapost.gov.in/VAS/Pages/ComplaintRegistration.aspx என்ற இணைப்பிற்குச் சென்று NEFT என்பதை தேர்வு செய்து புகார் அளிக்கலாம்.
மின்னஞ்சல்
[email protected] என்ற மின்னஞ்சல் மூலம் பெங்களூருவில் உள்ள நோடல் அலுவலகத்தில் NEFT பரிவர்த்தனை குறித்து புகார் அளிக்க முடியும்.
NEFT, RTGS Facility In Post Office Savings Account And Charges
அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் NEFT, RTGS வசதி? செய்வது எப்படி? | NEFT, RTGS Facility In Post Office Savings Account And Charges